தமிழ் போனால்.. உலகில் தமிழன் ஏனடா?
மு.வே.யோகேஸ்வரன்

தலைவன் நடந்துசென்ற மண்கூட 
தமிழ் என்றே சொல்லும்..!
விலை மதிக்க முடியாத எதிர்காலச்சொத்து..அவன் !
மலைகடந்து மண் கடந்து கடல்கடந்து 
காலமெல்லாம் வாழும் தலைவனது பெயர்.!

தலைவன் மரிப்பதில்லை..
தலைவனாய் இருந்தால்..!
தலைவன் அழிவதில்லை 
தலைவனாய் இருந்தால்..!

தமிழுக்கு அழிவில்லை 
என்பதுபோல்..
தலைவனுக்கு ஏதடா அழிவு..?
தலைவன் வருவான்..!

நாங்கள் உயிரைக் கொடுத்துக் காத்தது தலைவனை அல்ல..
தமிழை..!
தமிழைக் கொடுத்துக் காத்தது..
தலைவனை அல்ல..
அமுதை..!
மண்ணை..!

அட..மண்ணும் தமிழும் தமிழனுக்கு ஒன்றடா..மூடா..
வந்துபார் இனிப் புரியும்..!

அமுதும் தமிழும் ஒன்றே..
அதுபோல்..
தமிழும் தலைவனும் ஒன்றே..!
தமிழ் பேசும்..
அமுதம் பேசாது ..ஊறும்..!

தமிழ் ஊறும் ..தமிழ் ஈழம்
எங்கள் நாடடா..
அதை.. தருவதெனில்..
எம்முயிர் இனி ஏனடா ..?
அட மூடா..! தமிழ் போனால்.
தமிழன் உலகில் ஏனடா..?
உயிர் போனால் தமிழ் இனி ஏனடா..?