தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வுத்திட்டம் வேண்டும்!

09-10-11தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வுத்திட்டம் ஏற்படுத்தப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெறுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பின் தலைமை காணப்படுகிறது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு ஏற்ற ஒரு தீர்வுத்திட்டம் வருமேயானால் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படமாட்டாது.

கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படினும், சரியான தீர்வு கிடைக்குமாயின் அதனை எவரும் எதிர்க்க வாய்ப்பில்லை. அதாவது, சமஷ்டி அரசியலமைப்பு முறைமை மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். அவ்வாறின்றி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வுகள் அவர்கள் மீது திணிக்கப்படுமாயின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் வெடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

(www.eelamalar.com)