தாய்மண்ணை நினைத்தவன் சாவை நினைப்பானா

தலைகள் விழலாம்
உயிர்கள் விழலாம்
தமிழர்தாகம் அது விழாது…!

காற்றில் புயலாகி
நீரில் கடலாகி
நிலத்தில் நெருப்பாகி நில்லடா…!

நேற்று போராடி நிமிர்ந்த மாவீரர்
வழியில் நின்று களமாடடா
நிமிர்கொண்டு களமாடடா
பகை நிலை குலைய வாகை சூடடா…!

தலைகள் விழலாம்
உயிர்கள் விழலாம்
தமிழர்தாகம் அது விழாது…!

உன்னைநிகர்த்த வீரனில்லை
உண்மை உண்மை நீ போராடு
ஒடுக்குமுறையையும் அடக்குமுறையையும்
அடித்து நொருக்கடா வேறோடு…!

தாய்மண்ணை நினைத்தவன் சாவை நினைப்பானா மார்பு நிமிர்த்தடா படைநடத்து
மானம் இழந்தென்ன வாழ்வு
பகையை மாய்த்து நெருப்பில் அவனுடல் கிடத்து…!

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”