இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? தலைவர் உயிருடன் பிடிபட்டாரா? மிரட்டும் கருணா

2இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? தலைவர் உயிருடன் பிடிபட்டாரா? அதிர்ச்சித் தகவல்களை வெளியிடவுள்ளான் கருணா. கருணா சில அதிர்ச்சி தரும் இரகசியங்களை வெளியிடவுள்ளதாக தகவலகள்கள் வெளியாகியுள்ளது. தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்ததால் கடும் விசனமுற்ற கருணா சிங்கள அரசாங்கம் இறுதி யுத்ததில் செய்த கொடுமைகளை வெளியிடவுள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மகிந்த தரப்பு சிறைக்குச் சென்று கருணாவைச் சாந்தப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவதாகவும் தெரியவருகின்றது.

கருணா இரகசியங்களை கசிய விட்டால் மகிந்த தரப்புக்கே கடும் நெருக்கடி ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை சிறைக்குள் வைத்து கருணாவை தீர்த்துக் கட்டி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவும் சில சதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. புலிகளின் தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது எனும் உண்மைகளை வெளியிட தயாராக இருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

(www.eelamalar.com)