தலைவர் பிரபாகரனின் வித்துடலை தகனம் செய்தோம்!

eelamalar001தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம். அப்போது நான் அங்கிருந்து நினைவுப்பொருளாக அவரது அடையாள அட்டையினை எடுத்து வைத்திருந்தேன். அதனை என்னுடனேயே வைத்துள்ளேன். இறுதிக்கட்டப் போரில் தாம்தான் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொன்றது எனக் கூறிக்கொள்ளும் 53ஆவது பிரிகேட்டிற்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அந்த அடையாள அட்டையினைத் தான் இராணுவ அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக எதிர்காலத்தில் வழங்குவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

(www.eelamalar.com)