தளபதி ஜெயம்,தளபதி பேரின்பம்,
தளபதி கேணல் வீரத்தேவன் ஆகியோரின் தலையில் அணியினர் நகர்வும், நடந்தது என்ன என்ற விபரிப்பும்…”

“தாயக விடுதலைக்கு வீச்சாகச் செயற்பட்ட உன்னத தளபதிகள்”

04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம்,தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்க்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவருவதற்காகன பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு 
வழங்கப்படுகிறது.

தலைவரின் திட்டத்திற்கு அமைவாக கடற்புலிகளின் சிறப்பு 
விநியோக அணிகளும்( பதினைந்து படகுகள் )இவர்களுக்கான பாதுகாப்பை அதாவது (கடற்புலிகளின் சிறப்புத்தளபதி அவர்களால் ஒவ்வொரு விநியோக நடவடிக்கைக்கு
செல்லும்போது தமிழீழத்தின் எந்தப்பகுதியிலிருந்தும் விநியோக நடவடிக்கைமூலம் வரும் போராளிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக
இருக்கவேண்டும் என கடற்புலிகளின் கடற்தாக்குதல் அணிகளுக்கு தெரிவிப்பார்.

சிறிலங்கா கடற்படையை இத்தரையிறங்கு அணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட கடற்புலிகளின் கடற்த்தாக்குதலணிகளும் .ஒழுங்குபடுத்தப்பட்டு அணிகள் 03.04.2009 அன்று மாலை புறப்பட்டன இருந்தும் எமது படகுகள் கூடுதலாக சென்று கொண்டிருந்ததால் எதிரியால் இணங்காணப்பட்டு புறப்பட்டதிலிருந்து கடலுக்குள் எறிகணைகள் ஏவப்பட்டுக்கொண்டிருந்தான்.எப்படியாகினும் தமக்குகொடுக்கப்பட்ட பணிகளுக்கமைவாக விநியோக அணிகள் சென்று தமக்கானா இடத்தில் நிலைகொள்ள கட்டளை கிடைத்ததும். அதாவது 04.04.2009
அதிகாலை சுமார் மூன்று மணியளவில்
கேணல் வீரத்தேவனது அணியே முதலாவதாக இறங்கியது.நாமோ
சிறு அணி எமது போராளிகள் அனுபவமற்ற நீண்ட தூர கடற்பயணம் செய்ததாலும் காப்பரணற்ற நிலையிலும் அவ்வேளையில் கரையில் நின்ற மற்றும் மேலதிகமாக வந்த இராணுவத்தினருடன் இறுதிவரை போராடி வீரச்சாவடைகின்றனர்.

தாயக மண் விடுதலைப் போரிலே இவர்களோடு களமாடி வீரகாவியமான அனைத்துப் போராளிகளையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”