பாசம்

இந்த உலகம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களை சந்தித்திருக்கின்றது,எத்தனையோ விடுதலை வீரர்களை கடந்திருக்கின்றது.எத்தனையோ சரித்திர நாயகர்களை தன்மடியில் தாங்கியிருகின்றது,எத்தனையோ வீரர்கள் வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றனர்,வரலாற்றில் இடம் பிடிதிருக்கின்றனர் இந்த விடுதலை இயக்கங்களுக்கு,அமைப்புகளுக்கு தலைமையேற்று இருந்தவர்களை அவர்கள் எந்தநாட்டின் எந்த மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக போராடினார்களோ அந்த நாட்டுமக்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று அவர்களின் கட்டளைக்கு கீழ்பணிந்து வழிநடந்த வீரர்கள் யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமையை நேசித்த அளவிற்க்கு மற்றவர்கள் அவர்களது தலைமைகளை நேசித்திருப்பார்களா என்பது உறுதியாக்கூற முடியாது.

காரணம் நாங்கள் அண்ணண் பிரபாகரனை விடுதலைப் போராட்டத்தின் தலைவராக, எங்களை வழி நடத்துபவராக, எங்கள் இலட்சியத்தை போராடி வென்றுதரும் ஒரு தலைவராக,எங்களின் காப்பரணாக,தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாக மட்டும் பார்க்கவில்லை. அன்னையாக,தந்தையாக,அண்ணணாக,ஆசானாக,ஆசிரியராக,வழிகாட்டியாக,முன்னோடியாக துயர் நீக்கியாக,ஒழுக்க சீலனாக இவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு புலிவீரனும் உயிராய் நேசித்த தலைவன் அண்ணண் பிரபாகரன்.

அன்னையிடம் கிடைக்காத பாசம்கூட எங்கள் அண்ணணிடமிருந்து கிடைக்கும்.அமைப்பில் இணைந்து அதுவரைக்கும் அண்ணையை நேரில் கண்டிராத போராளிகளுக்கு அண்ணை எங்களை சந்திக்க வரமாட்டாரோ என்று மனது ஏங்கும்,எப்போ அண்ணையை காண்போம் என்று துடிப்பார்கள்,அண்ணண் தங்களை சந்திக்க வருவதாக செய்தியறிந்தால் கால் தரையில் படாது அவரை நேரில் கண்டுவிட்டால் போதும்
தாயை பிரிந்த சோகம்
தந்தையின் பாசம்
தங்கையின் நேசம் இப்படி எல்லாமுமே மறந்து போகும் அவர் வாயால்
“தம்பியாட்கள் எப்படி சுகம்”என்று கேட்டாலே கானும் அந்த கனம் உயிரை கொடுக்க தோணும்.

அண்ணணை தலைவராக மட்டும் அவர்கள் பார்க்கவில்லை மாறாக
தங்கள் உயிராக நேசித்தார்கள்
மூச்சு காற்றாக சுவாசித்தார்கள்அவருக்காககவே அவர் கொண்ட இலட்சியத்திற்காகவே உயிரை இழக்க துணிந்தார்கள்,வெடிசுமந்து வெடித்தார்கள் உலகில் இந்தளவுக்கு அன்பையும் பாசத்தையும் உயிருக்குயிரான நேசத்தையும் பெற்ற தலைவர்கள் இருந்திருக்கமாட்டார்கள் என்பதே என் வாதம்.போரளிகளுக்கு மனசோர்வு வந்திடாதபடி அவர்களை உற்சாகமாக செயல்பட வைப்பதற்க்கு தலைவரால் உருவாக்க பட்ட கோஷம்தான்
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”இதுவே அவர்களின் வேதமந்திரமாகவும் இருந்தது.
ஆனால் அதே போராளிகள் களமுனைகளில் வீரச்சாடையும் தருவாயில் கடைசியாக தலைவர் சொல்லாத ஒன்றையும் சொல்வார்கள் அது

அண்ணை பத்திரம்,
தலைவர் பத்திரம்,
தலைவரை கவனமாக பாருங்கோ,
தலைவரின் திட்டத்தை சரியாக செய்யுங்கோ,
அண்ணையின் கரத்தை பலப்படுத்துங்கள்
தலைவர்தான் கவனம்
தலைவர் பத்திரம்
என்பதுதான் அது.இந்தளவிற்க்கு தலைமையின் மீது பாசத்தையும் உயிருக்குயிரான நேசத்தையும் உயிர் பிரியும் கடைசி கணத்தில்கூட தலைவரை காக்க துடிக்கும் மனங்களையும் கொண்டவர்கள் தலைவனின் பிள்ளைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்.உலகில் பெற்றதாய் தன் பிள்ளையின் மீது வைத்திருக்கும் அன்பிற்க்கு,பாசத்திற்கு ஈடுயிணையில்லை என்பதையே பார்திருக்கின்றோம்,கேட்டிருக்கின்றோம்,படித்திருக்கின்றோம்,உணர்ந்திருக்கின்றோம்,அனுபவித்திருக்கின்றோம் ஆனால் அந்த தாய்பாசத்தையும் விஞ்சும் தலைவன்மீது நாங்கள் கொண்ட பாசம்…!!!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.