தியாகி திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம் எழுதிய கவிதை…!
தமிழில் : ஃபஹீமாஜஹான்

“திலீபன்”

அனேகமானோர் கடந்து செல்வர்
காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட
உனது நினைவுகளை

யாருக்கும் தெரியாமல்
அவற்றைப்
பொறுக்கிக் கொள்கிறேன்

உன்னதமெனப் போற்றும்
கொள்கையொன்றுக்காக
மனிதனொருவனால்
வாழ்வினை
உதறியெறிந்திட முடியுமா
வீரன்தான் அவன்
என்றுமே எனக்கு

பெயர் , ஊர்
அடையாளஅட்டை
எதுவும் தேவையில்லை
‘தேசப் பிரேமி’களின்
கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர்
திலீபன்…

இன்றைய இராப்பொழுதும்
உனது நினைவுகளை
உள்ளத்தினுள்ளேயே
சிறைப்படுத்திக் கொள்கிறேன்
யாருமறியாமல்.