தியாக தீபம் திலீபனின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம்?

நல்லூர் திலீபன் தூபிப்பகுதியிலுள்ள தனியார் தொலைக்காட்சியின் விளம்பர பலகையினை அப்பகுதியிலிருந்து அகற்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் திலீபன்; நினைவு தூபிக்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகை அகற்ற நடவடிக்கை எடுக்கமாறு யாழ்.மாநகரசபையிடம் கோரியுள்ளார்.

திலீபன் நினைவு தூபி பகுதியினை சூழ பாதுகாப்பு வேலி நேற்றைய தினம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களினையும் அவர்களது உணர்வுகளையும் மதிக்கும் வகையில்; இப்புனித பிரதேசத்திற்குள் உள்ள இந்த விளம்பரப்பலகையை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.