திரு ஹேமலதாஸ் முத்துலிங்கம் என்னும் இலங்கை தமிழர் இலங்கைக்கு பலவந்தமாக இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

திரு ஹேமலதாஸ் முத்துலிங்கம் என்னும் இலங்கை தமிழர் இலங்கைக்கு பலவந்தமாக இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார். இவர் இலங்கையில் அரச படைகளால் சித்ரவதைக்குள்ளாகி இங்கிலாந்தில் தனது உயிரை காப்பாற்றக்கோரி தஞ்ச விண்ணப்பம் கோரி இருந்தார்.

இவரது அகதி தஞ்ச கோரிக்கை உள்நாட்டு திணைக்களத்தால் (home office) நிராகரிக்கபட்டதை அடுத்து இவர் 08.11.2017 அன்று கை யொப்பம் இட சென்ற போது உள்நாட்டு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பும் பொருட்டு தடுத்து வைக்கபட்டுள்ளார்.

திரு ஹேமலதாஸ் தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கையிலும் பின்பு இங்கிலாந்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளில் முனைப்புடன் செயல்படும் இவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டால், இலங்கை அரச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கு ஆளாவார் என அஞ்சப்படுகிறது.

இவரது தாயருடன் நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தனது மகனது உயிர் குறித்து இலங்கையில் ஆபத்தில் உள்ளதாக கூறி கலங்குகிறார்.