தீவீரவாதியின் மனம்

மூன்று பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பத்தில் ( முதல் ஆண், இரண்டாவது பெண்,முன்றமாவது ஆண்)
முதலிரண்டு பிள்ளைகளும் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக, அவர்களால் தமிழ்மக்கள் படும் துயரங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தலைவரின் வழிகாட்டுதலை உளமார ஏற்று விடுதலை இயக்கத்தில் இணைந்து நாட்டுக்காக போராடி வீரச்சாவு அடைந்துவிட்ட நிலையில்…

மூன்றாவது பிள்ளையும் தானும் இயக்கத்துக்கு போவேன் எண்ட அக்கா, அண்ணண் சாவுக்கும் எங்கட சனத்தின்ர விடிவுக்காக நானும் இயக்கத்தில் இணைந்து நாட்டுக்காக போராடுவேன் என்று கூற அப்பிள்ளையை பெற்ற பெற்றோர்களோ ஏற்கனவே ரெண்டை கொடுத்திட்டன் இப்ப நீயும் எங்களை விட்டு போறியோ போகாதே என்று தடுக்க. ஆனால் அவனோ இயக்கத்தில் இணைந்தே தீருவேன் அதுவும் கரும்புலியாக போவேன் என்று பிடிவாத மாக நிற்க விடயம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றது.

பிரச்சினையை முழுமையாக விளக்குவதற்கு முன்னதாகவே தலைவரிடமிருந்து வந்து விழுந்தது பதில்.”அவர் இயக்கத்தில் சேர அனுமதியில்லை தாய் தந்தையரை கவனிக்கும் பொறுப்பு அப்பெடியனுடையது”என்று.

நாட்டுக்காக வீட்டுக்குகொரு பிள்ளையை தாங்கோ என்றுதான் தலைவர் கேட்டார் ஆனால் நாங்களோ அந்தகணக்கையும்மீறி இரண்டு பிள்ளைகளை கொடுத்திட்டம். கடைக்குட்டியும் தங்களை விட்டிட்டு போயிடுவானே என்ற பெற்றோரின் தவிப்பை உணர்ந்த தாயுள்ளத்திற்கு சர்வதேசம் சூட்டியிருக்கும் பெயர் தீவீரவாதி.

ஓம் தீவீரவாதிதான் கொண்ட கொள்கையில், இலட்சியத்தில்,மாவீரர் கனவை நனவாக்குவதில் துளியும் சமரசமின்றி தீவீரமாக இலக்கை நோக்கி மாவீரர் ஈகத்தை நெஞ்சிலேந்தி பயணிப்பதால்தான் தீவீரவாதி என்றழைக்கின்றார்கள் போலும்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.