துடி… துடித்த முன்னாள் போராளி..! தெரிகிறதா வலி..?
மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மன உளைச்சல் காரணமாக 08.08.15 அதிகாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளியான இவர், ஐந்தாம் வட்டாரம், இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவராவார்.
மிகுந்த வறுமையில் இருந்த இவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் வைத்தியம் செய்வதற்கான பணம் கிடைக்காததால், உதவி கேட்டு எந்தவித பிரயோசனமும் இல்லாது இவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரும், நீதவானும் சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பல முன்னால் போராளிகள் வாழ முடியாமல் தவிற்கின்றார்கள் எத்தனை தமிழன் பார்ப்பது உண்டு. எம்மிடம் பதில் என்ன மௌனம் எங்களுக்கு எவ்வளவு கடன் இந்த இயக்கத்தால தான் நாம் அழிந்தது அந்த இயக்கத்தால தான் பலர் நல்லா இருக்கிறார்கள் என்றால் அதற்கும் பதில் மௌனம். அடுத்த போராட்டம் வெடிக்கும் தமிழீழம் மலரும் என வெளிநாடுகளில் வரிந்து கட்டும் யாருக்காவது முன்னால் போராளிகளின் நிலை தெரியுமா கேட்டால் தலைவர் பிரபாகரனை விட அக்கறை போல் கதை என்ன உலகம்
இவ்விடத்தில் தான் தலைவர் பிரபாகரன் ஞாபகம் வருகிறார் ஒரு ஊடகவியலாளர் கடைசிக் காலங்களில் உங்கள் பணி என்ன என்று வினவியதற்கு என் கடைசி காலம் விழுப்புண் அடைந்த போராளிகளை பராமரிப்பது என மிக தெளிவாக கூறினார் அவரிடம் இருந்தது தூர நோக்கு அதை இவர்களிடம் எதிர் பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான விடயம். புலிகளின் தலைவர் பாராளுமன்ற அரசியலில் என்றும் நாட்டம் கொண்டவர் அல்ல மாறாக விடுதலை என்பதில் இன்று வரை உறுதியாக உள்ளவர்.
இப்படியான நிலையில் வெளிநாட்டில் பணி, குளிரில் மாவீரர்களின் நினைவால் சேர்க்கப் படும் பணத்தை யாருடைய அரசியலுக்கோ பயன் படுத்துவதால் என்ன பயன்……. அதனை இந்த மாவீரர் போராளிகளுக்கு பயன் படுத்தினால் என்ன குறை, கேட்டால் நாம் எவ்வளவு செய்கிறோம் அங்கு இங்கு என எல்லை பிரிக்கும் வர்களால் கிழக்கு மாகாணம் உள்ளது என்றால் ஆ என்று தான் வினவுவார்கள் காரணம் அவ்வளவு தான் இவர்களின் அறிவு அவை எல்லாம் தலைவருடன் சென்று விட்டது வட-கிழக்கை இரு கண்களாக பார்த்தவர் அந்த காலம் வருமா போராளிகளை பார்ப்பாரா என ஏங்கும் எத்தனை உள்ளங்கள். இவர்களின் வலி எமக்கு தெரிகிறதா…? அல்லது எதற்கு இந்த வலி என்று நாம் நினைப்பதா…? மனச் சாட்சியே முடிவு உம்மிடம்……