துடுப்புக்களின் தீரா வலித்தல்…!

லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவான கவிதை…

உடைத்தெறிந்த துடுப்புக்களின்
இன்னும் அடங்காத் துடிப்பு
என்றும் கூர்மைமழுங்கா
வலிமையின் உயிர்ப்பே.

எதிர் நீச்சலிடுகின்ற
எல்லாவற்றுள்ளும்
அதே இயக்கம்
துடுப்பாக இருத்தல்
துடுப்பாக உழைத்தல்
துடுப்பாக வலித்தல்
வலிமை கொள் வாழ்வே.

துடுப்புக்களை
உடைத்தெறிந்த பின்னாலும்
உடைக்க முடியாது போனது
மரணமில்லா வாழ்வின்
திசை நோக்கிய
தீரா வலித்தலை
தீராது வலிக்கும் துடுப்புகளும்
சுதந்திரத் தூரிகையே.

சுதந்திரத் தூரிகையின்
தீராவலி கொண்ட இயக்கம்
என்றைக்குத் தான் தணிந்தது?

– சுபாஸ்.
சூரியப் புதல்வர்கள் 2003 இதழிலிருந்து….

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”