நந்திகடல் அலைகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இது புலிகளின் ரகசியம்

விடுதலை அமைப்பில் அண்ணையின்ற சொல்லுக்கு அவர் ஒரு கட்டளையை பிறப்பிக்கும்போது ஒரு அலுவலை சொல்லும் போது அது எவ்வளவு கடிமான பணி எண்டாலும் எவ்வளவுதான் அதில் பிரச்சினனை எண்டாலும் அது எவ்வளவு சிக்கல் நிறைந்த பணியென்றாலும் தலைவர் அதை சொல்லும்போது முக்கியமான தளபதிகள்,பொறுப்பாளர்கள்,முதல் கடைநிலை போராளிவரை தலைவரின் சொல்லுக்கு ஓமண்ணை.என்பதுதான் பதிலாக இருக்கும்.ஆனால் இதுவே தலைவரின் பாதுகாப்பு,தலைவரை பாதுகாக்கின்ற விடயம்,தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் எண்டால் இதே தளபதிகள் போராளிகள் தலைவரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லுவினம்.ஏனென்றால் தலைவர் எப்போதுமே தண்ட உயிரையோ பாதுகாப்பையோ பெரிதாக எப்போதுமே எண்ணுவதில்லை.இங்கே ஒரு நிகழ்வை கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை பெண் எழுத்தாளர் ஒருவர் தலைவருடன் நேர்கணல் செய்ய விரும்பி அதை தலைவருக்கு தெரியபடுத்தி தலைவரும் சம்மதம் தெறிவித்து அதற்கான ஒழுங்குகள் செய்யபட்டு நேர்கணல் பின்நேரம் 4.30க்கு தொடங்குகின்றது அது நீண்டுகொண்டே இரவு நேரம்7மணியை நெருங்குகின்ற தருவாயில் அண்ணையின் பாதுகாப்புக்கு நிண்ட போராளி கானும் இத்துடன் முடித்து கொள்ளுங்கள் நாங்கள் போக வேணும் என்கின்றார்.அதற்க்கு அந்த பெண் எழுத்தாளர் இருங்கோ இன்னும் கதைக்க வேனும் அண்ணணே ஆவலாக கதைத்து கொண்டிருக்கின்றார் நீங்கள் ஏன் நிறுத்தசொல்லுறியள் என்று கேட்கிறார்.அதற்க்கு அந்த போராளி விட்டால் இவர் விடிய விடிய கதைத்துக்கொண்டிருப்பார் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறி நாங்கள் போகலாம் அண்ணை என்கின்றார்.தலைவரும் புன்முறுவலோடு அதை ஆமோதிக்கின்றார்.தலைவரே கதைக்க விரும்பினாலும் அந்த இடத்தில் அந்த போராளி அதை அனுமதிக்க வில்லை காரணம் தலைவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடமை.

இதே போலதான் கடைசி சண்டைக்கு இந்தியாவாலும் சர்வதேசத்தின் தூரோகத்தாலும் நாங்கள் முதுகில்குத்தபட்டு ஆளனி பற்றாகுறை ஆயுதபற்றாகுறை இதை சரிசெய்ய முடியாமையாலும் ஒவ்வொரு இடமாக ஆமியிடம் விழ ஆமி முன்னேறி வர வர சில முக்கிய தளபதிகள் பொறுப்பாளர்கள் அண்ணையை சந்தித்து தயங்கி தயங்கி நாளுக்கு நாள் எங்கட நிலைமை மோசமாகிகொண்டே போகுது எனவே நீங்கள் வெளியேறி செல்ல வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யட்டுமா என்று கேட்க தலைவர் மிக கடுமையான தொனியில் இவ்வளவு போராளிகளையும் என்னைநம்பி வந்த இத்தனை மக்களையும் சாக கொடுத்திட்டு என்னை தப்பி போக சொல்லுறியளோ ஏலாது என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.தலைவரின் இந்த பதில் அங்கு நின்ற யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை காரணம் இப்படி கேட்டால் கிழி விழுகுமென்று தெரிந்துதான் கேட்டனர் ஆகையால் தலைவரின் பதிலை அவர்கள் சாட்டைசெய்யவில்லை காரணம் பிரச்சினை தலைவர் உயிர் சம்மந்தமானது என்பதால்.

தலைவர் உயிரோடு இருந்தால் கானும் எவ்வளத்தை நாங்கள் இழந்தாலும் மீண்டும் பிடித்துவிடுவார் மீளக்கட்டமைத்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் தலைவர் உயிருக்கு ஆபத்து என்றால் தமிழீழ விடுதலை கேள்விகுறியாகிவிடும்.அண்ணையை போல ஒரு தலைமை இனி எந்த ஜென்மத்திலும் தமிழினத்திற்க்கு வாய்காது என்ற அசைக்க முடியா நம்பிக்கை.ஆமி முன்னேறி வர வர முக்கிய சில தளபதிகளும் கரும்புலி அணியினரும் தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தனர் அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.தலைவர் வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் வலுக்கட்டாயக தூக்கி செல்லவும் ஆயத்தமாக இருந்தனர்.இதனால் தலைவருடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றும் இந்த விடயத்தில் அவர்கள் எந்த சமரசத்திற்க்கும் தயாராக இல்லை.கனல் கக்கும் கண்களுடன் தலைவரை பாதுகாத்து சுற்றி நின்ற கரும்புலிகள் துணையுடன் முற்றுகையை உடைத்து தலைவரை வெளியே எடுப்பதே அவர்களின் மிகமுக்கிய பணியாக இருந்தது.

அதன் பிறகு நடந்தது அந்த இடத்தில் நிண்டவர்களுக்கும் நந்திகடல் அலைகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.இது புலிகளின் ரகசியம் எப்பேர்பட்டது என்று தெரிந்தவர்களுக்கு விளங்கும்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.