மே – 18 நினைவு நாள்.

மானிட மாண்புகள்
தமிழீழ மண்ணில்
கொடூரமாகச் சிதைக்கப்பட்ட
வரலாற்றின் குறியீடு மே – 18.

போலி முகமூடிகள் புனைந்த
நாகரிக நாடுகள்
தமிழ்ப் பேரினத்தை
நம்ப வைத்து கழுத்தறுத்த
கருப்பு நாள் .
மூடுதிரைக்குள் மறைக்கப்பட்ட
சிங்கள பெளத்த இனவெறியாட்டம்
வெளிச்சத்திற்கு வந்து உலகை
அதிர்ச்சியில் ஆழ்த்திய நாள்.
மே -18.

விடுதலை முழக்கத்தின் முடிவுரை அல்ல
இலட்சியப் பயணத்தில் புதிய தொடக்கம் .
உறங்கிக் கிடந்த உணர்வுகள்
துள்ளியெழுந்து திசையெங்கும் பரவின.
மாயையில் சிக்கி
மயங்கிக் கிடந்த மாந்தர்க்கு
உண்மை நிலையை
உரத்துச் சொல்லியது மே -18.

புதிய எழுச்சி
புவியெங்கும் பரவியது.
ஈழத்தின் துயரம்
முகத்தில் அறைய
ஏதிலிகள் அவலம்
இதயத்தை பிழிய
கனத்த உள்ளத்துடன்
இக் கருப்புநாளை நினைவு கூர்கிறோம் .
எனினும் மே -18.

விடுதலை முழக்கத்தின் முடிவுரை அல்ல
இலட்சியப் பயணத்தில் புதிய தொடக்கம்.
இந் நாளில் சிங்கள பெளத்த பயங்கரவாத இராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களையும் போராளிகளையும் உணர்வுப் பெருக்குடன் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”