2019 சித்திரை மாதம் 27ஆம் திகதி நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பொதுத் தேர்தல்

2019 சித்திரை மாதம் 27ஆம் திகதி நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் நிர்வாக குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் பரவி வாழும் தமிழர் அனைவரிடத்திலும் அவர்களின் உரிமை மற்றும் அவர்களின் கடமையை எடுத்துக்காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் நிர்வாக செயற்பாட்டாளர்கள் குழுவாக இணைந்து மக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.      

ஜனநாயக முறையில் நடைபெறவிருக்கும் இத்தே‌ர்த‌லி‌ல் குறிப்பாக இந்த பிரச்சாரம் ஆனது தேர்தல் தொடர்பான பொதுவான பிரச்சாரம் ஆகும் மக்களிடத்தில் அவர்களின் உரிமையை எடுத்துக்காட்டும் நேரமாகும் எந்த ஒரு வேட்பாளர்களையும் சார்ந்து இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 24/03/2019 இங்கிலாந்தில் பல இடங்களில் இது தொடர்பான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

நன்றிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்தேர்தல் நிர்வாககுழு.

-பிரித்தானிய செய்திகள்