கனகாலமில்லை
நம்பிக்கை சாகவில்லை
காலம் எம்மை கைவிட்டதில்லை
எங்கட கடவுள் இன்னும் சாகயுமில்லை!

நாடும் இல்லை
நடக்க காலும் இல்லை
நாதியில்லை
வாழ வழியுமில்லை
இப்ப ஊரும் இல்லை
எங்கட உறவும் இல்லை
வீடும் இல்லை
நிமிர்ந்த பனையும் இல்லை
(நாடும் இல்லை….)
எங்கட கடலும் இல்லை
உழுத வயலும் இல்லை
காணி இல்லை
கேட்டால் பதிலும் இல்லை
எங்க சொல்ல
சோகம் கொஞ்சம் இல்லை
அவங்கள் இல்லை
அதனால் நிம்மதி இல்லை
(நாடும் இல்லை…)
சனத்தை காணயில்லை
கேட்டால் பதிலுமில்லை
என்ன சொல்ல
உலகம் பாக்குதில்லை
கனகாலமில்லை
நம்பிக்கை சாகவில்லை
காலம் எம்மை கைவிட்டதில்லை
எங்கட கடவுள் இன்னும் சாகயுமில்லை!
(நாடும் இல்லை…..)