நாதியற்ற நம்மினத்தின் குருதியை நக்கி வாழும் சுகம்..

நாதியற்ற நம்மினத்தின் குருதியை நக்கி வாழும் சுகம்..
நெடு நாட்கள் நம்மண்ணில் மொட்டைத் தலைகளுக்கு நிலைக்காது!
குட்டி போட்ட பூனைபோல் அங்குமிங்கும் ஓடி
குத்திக் கரணம் அடிக்கிறார் மகிந்தா..!
பட்டி தொட்டி எங்கும் அலைந்து பகைவனது கையாட்கள்
போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்ப..பக்கபலம் சேர்க்கிறார்!
இனப்படு கொலைகளுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லைஎன்று
ஈனப் பிறவிகள் மானமின்றி எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும்
சட்டம் ஒருபோதும் சண்டாளர் சொல்கேட்டு(அடி)மட்டமாகி விடாது..
சரித்திரம் எப்போதும் தரித்திரங்களைப் பற்றியே பேசிக் கொள்ளாது!
நீதி தேவதையின் விழிகள் ஒருநாள் நிச்சயம் திறக்கும்..
போதி மரத்தின் கீழிருந்து அகிம்சையைப் போதித்துக் கொண்டு..
நாதியற்ற நம்மினத்தின் குருதியை நக்கி வாழும் சுகம்
நெடு நாட்கள் நம்மண்ணில் மொட்டைத் தலைகளுக்கு நிலைக்காது!
சிறுத்தைகள் மீண்டும் சீறி எழும்போது சிறுநரிகள் சிதறியோடும்..
சிங்கங்கள் என்னும் போர்வைக்குள் வாழும் சிங்கள அசிங்கங்கள்
அங்கங்களை இழந்து அழுது புலம்பி எங்களது அருமை மண்ணைவிட்டு
அடிபட்டு ஓடும் நாள் அதிக தூரத்தில் இல்லை!
ஐ.நா. எம்மினத்துக்கோர் அரிய தீர்ப்பை வழங்கும்.. இல்லையேல்
செந்நாய் களைச் செந்தமிழர் மண்ணை விட்டு விரட்டி அடிக்கும் அந்த
நன்னாளை நம்மினத்து வேங்கைகள் நம்தலைவர் தலைமையில்
பொன்னான திகதியிட்டுக் குறிப்பர்..கொடி ஏற்றுவர்..திண்ணமிது!
_மூ.வே.யோ_