தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் .!

சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் காலத்தின் தேவை கருதி மீள் வெளியீடு செய்கின்றோம்

கேள்வி :-

புலம்பெயர்ந்து வாமும் தமிழீழ மக்களை நேரடியாகச் சந்தித்து

அவர்களின் உள்ளக்கிடக்கைகளை, அவர்களின் உணர்வு நிலையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் தொடர்பில், நீங்கள் என்ன

கருதுகிறீர்கள்!

பதில் :-

புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் ஐரோப்பாவெங்கும் பரந்து வாழ்ந்துகொண்டிருந்தாலும் தாயகத்து உணர்வோடு தமிழீழ விடுதலையை நெஞ்சத்தில் சுமந்து தாயகம், தேசியம், தன்னாட்சி இறைமை எனும் அடிப்படைக்கொள்கைகளைத் தங்களது இலட்சியமாக வரித்துக்கொண்டு தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் காலத்திலேயே

தமிழீழ இலட்சியக் கனவை நனவாக்கிவிட வேண்டும் எனும் உள்ளத் துடிப்போடு அல்லும் பகலும் அயராது உழைத்து, குடும்ப சுகங்களையும் கட்டுப்படுத்தி தங்களது முழுப்பலத்தையும் தமிழீழ விடுதலைப் போருக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டுக்கொண்டிருப்பதை நேரடியாகக் கண்ணுற்றுமிகுந்த பெருமிதமடைந்தேன்.

“புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

மீது கொண்டுள்ள அளவற்ற அன்பையும், பாசத்தையும். பற்றையும் பார்த்தேன். தேசிய

விடுதலைப் போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டபோது புலம்பெயர் தமிழ் மக்கள்

கொதித்தெழுந்து தங்களது ஆவேச உணர்வை வெளிப்படுத்தி தாயக மண்ணின் பாசத்தை,

பற்றை வெளிப்படுத்தியிருந்தார்கள்.”

கேள்வி :-

தாயகத்தில், பொங்குதமிழ் அனுபவங்களுக்கும். இங்கு சுவிஸ் நாட்டில் நீங்கள் கலந்துகொண்ட பொங்குதமிழ் நிகழ்வில் நீங்கள் பெற்ற அனுபவத்திற்கும் என்ன வேறுபாட்டை அல்லது ஒற்றுமையைக் காண்கின்றீர்கள்?

பதில் :-

தாயகத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வானது முதன் முதலாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களின் அணிதிரட்டலோடு உணர்வுபூர்வமாக நடாத்தத் திட்டமிடப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது இராணுவத்தினரதும், ஒட்டுப்படையினதும் அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்களால் பொதுமக்கள் கலந்துகொள்ள முடியாது

தடுப்புக் காவல்களும், பயமுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இறுதி நேரத்தில்

பொதுமக்கள் அணிதிரண்டு வந்து இராணுவ காவல்களையும் மீறி கம்பிவேலிகளைக் கடந்து

பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து பொங்குதமிழ் நிகழ்வில் உணர்வெழுச்சியோடு

கலந்துகொண்டார்கள்

தாயகத்தில் தமிழீழ மக்கள் தங்களது சொந்த நிலத்தை இராணுவ அடக்குமுறைக்கு

பறிகொடுத்துவிட்டு அகதிகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் தமது சொந்த மண்ணிலேயே

அகதி நிவாரணத்தில் அடிமைகளாக, அடக்குமுறைகுட்பட்டு வாழும் தமிழ் மக்கள் தங்களது

தன்னாட்சி இறைமையை சொந்த மண்ணில் நின்றுகொண்டே ஆத்மார்த்தமாக

வெளிப்படுத்தும் உணர்வெழுச்சியாகவே அந்தப் பொங்குதமிழ் நிகழ்வு இருந்தது. “நாங்கள்

எங்கள் வீடுகளுக்குச் செல்ல இராணுவத்தினைரே நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்”

எனக் கோசமெழுப்பி இராணுவத்தினருக்கெதிரான தங்களது ஆக்கிரோச

உணர்வெழுச்சியினை வெளிப்படுத்திக் காட்டியதன் மூலம் தமிழ் மக்களின் மண்பற்றையும் ,

அடிமை வாழ்வின் அவலத்தின் வெளிப்பாட்டையும் கண்டோம்.

இப்பொங்குதமிழ் நிகழ்வு மட்டக்களப்பு ,மன்னார், திருகோணமலை. வவுனியா என விரிவடைந்து தமிழ் மக்களின் தேசிய உணர்வெழுச்சியினையும் , விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும். புலிகளே தமிழர்! தமிழரே புலிகள் ! எனவும் வெளிப்படுத்திக் காட்டினர் .

புலம்பெயர் தமிழ் மக்களால் சுவிஸ் நாட்டில் நடாத்தி முடிக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு தங்களது சொந்தமண்ணை விட்டு அன்னிய நாட்டு மண்ணில் அகதி அந்தஸ்த்தில் அன்னிய கலாச்சார வாழ்வுக்குள் தங்கள் சுயத்தை இழந்துவிடாது சொந்த மண்ணின் விடுதலைக்காக தாயகம், தேசியம், தன்னாட்சி இறைமை எனும் அடிப்படை உரிமைகளை அடிநாதமாகக் கொண்டு சூரியத்தேவனே! எங்கள் தேசியத் தலைவன். அவர் ஒரு சுட்டெரிக்கும் சூரியன் என்பதை எல்லா மக்களும் ஒரே குரலில் உரக்கக் கூறி ஐ.நா.சபையின் அதிகாரிகளின் செவிப்பறை கிழியும் வண்ணம் பேரிரைச்சலோடு தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்திக் காட்டினார்கள்

தமிழ்த் தேசிய விடுதலைப் பேராட்டத்தைப் பிளவுபடுத்தி நசுக்க நினைக்கும் தேசவிரோத சக்திகளுக்கெதிராக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு தேசியத் தலைவரின் கரத்தைப் பலப்படுத்த அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என்ற செய்தியை அனைத்துலகங்களுக்கும் ஐ.நா.சபையின் முன்னால் அணிவகுத்துக் காட்டினார்கள்

புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் தங்கள் வசதியான வாழ்வுக்கும் அப்பால் சொநந்த மண்ணின் பாசத்தையும், பற்றையும், தேசிய உணர்வையும், தேசிய தலைமையையும் நேசிக்கும் உணர்வுபூர்வமான உள்ளத்து உணர்வுகளை சுவிஸ் நாட்டு பொங்குதமிழ் மூலம் வெளிப்படுத்தி எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டதை பெருமிதத்தோடுஉணர்ந்தேன்

கேள்வி :-

கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை இவ்வளவு நுட்பமாக, அதிலும் விரைவாக. பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ பாதிப்பு ஏற்படாமல் தீர்க்கப்பட்டிருப்பது தமிழீழ மக்களுக்கெல்லாம் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது சர்வதேச ஊடகங்கள், சிங்கள ஊடகங்கள் பெரும் அனர்த்தம் நிகழப்போவதாக இது தொடர்பில் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டிருந்தபோதும். இப்பிரச்சனை விரைவாகவும். பாதிப்புக்கள் இன்றியும் தீர்க்கப்படும் என விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் அறிவித்தது போன்றே. அதனைச் சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். வெளியாரின் கணிப்பீடுகளுக்கு முற்றிலும் மாறாக. இந்த உத்தரவாதத்தை தெரிவிக்கவும். அதனைச் செய்து முடிக்கவும் விடுதலைப் புலிகளால் எப்படி முடிந்தது!

பதில் :-

கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினையென்பது அவரது தனிப்பட்ட பலவீனங்களை

மூடிமறைத்து தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத் தன்னை ஒரு பிரதேச

வாதியாக தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் காட்ட முனைந்தார்.

இவரது பிரதேசவாதத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகித் தனித்துச்

செயல்படும் முடிவுக்கும் துணைபோகாது பல முக்கிய தளபதிகள் தேசியத் தலைவர்

அவர்களின் அழைப்பை ஏற்று வன்னிக்குச் சென்றனர்.

மட்டு-அம்பாறை மக்களையும் இவரது பிரதேச வாதத்திற்கு பலாத்காரமான முறையில்

ஈடுபடுத்த முயன்றும் மக்கள் அவரது முயற்சிக்குத் துணைபோகவில்லை. போராளிகளும்

ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர்.

கருணா தொலைக்காட்சிகளுக்கும். பத்திரிகைகளுக்கும் விடுத்த செய்திகள் முன்னுக்குப் பின்

முரணாகவும், பயத்தின் காரணமாக தன்னை ஒரு பலசாலியாக காட்டிக்கொள்ள

மேற்கொண்ட ஆயுதக் கண்காட்சியும். அறிவிப்புக்களையும் கொண் டு எமது தேசியத்

தலைவர் அவர்கள் கருணாவின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணித்து

வைத்திருந்தார்

இதனால்தான் கருணைாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சினை எமது இயக்கத்தினுள்

ஏற்பட்ட பிரச்சினை என்றும். இதற்கு விரைவில் போராளிகளுக்கு பாதிப்புகளின்றி விரைவில்

தீர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் கருணாவிடமிருந்து தப்பிவரமுடியாது அவர்களின் விருப்பத்துக்குமாறாக காவலரண்களில் நிறுத்தப்பட்ட போராளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார். போராளிகளைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறந்து ஒரு பயமுறுத்தல் தாக்குதலையை நடாத்துமாறு பணித்திருந்தார்

தாக்குதலுக்குத் தயாராக இருந்த தளபதிகளும், போராளிகளும் கருணாவின் பிரதேச

வாதத்திற்கு துணைபோகாது, ஒரு சகோதர யுத்தத்தை விரும்பாது விடுதலைப் புலிகளோடு

வந்து இணைந்து கொண்டனர். கருணா தப்பி ஓடிவிட்டார். தேசியத் தலைவர் அவர்களின்

கணிப்பும், நடவடிக்கையும் சரியாகவே இருந்தது

கேள்வி :-

இப்பிரச்சினை நடந்த காலகட்டங்களில், தலைவரின் அருகிருந்திருக்கிறீர்கள். கருணைாவின் பிடியில் இருந்து ஒருவாறு தப்பி வன்னி சென்ற நீங்கள், தலைவரை சந்திக்கின்றபோது தலைவரின் மனோநிலை எப்படியிருந்தது இப்பிரச்சினை தலைவரிடத்தே எத்தகைய பாதிப்பை

ஏற்படுத்தியிருந்தது?

பதில் :

நான் தலைவர் அவர்களிடம் வந்து சேரும் முன்னர் பல தளபதிகள் தலைவரிடம் வந்து

அங்குள்ள நிலைமைகளைத் தெளிவுபடுத்தி இருந்தார்கள். நான் சந்தித்தபோது நீங்கள்

இவ்வளவு பேரும் வந்தது எனக்குப் போதும். இனிமேல் நான் நடவடிக்கை எடுப்பேன் என

சிரித்துக்கொண்டே நிமிர்ந்து நின்றார். கருணாவின் செயற்பாடுகள் பற்றியும், ஏன் இவ்வாறு

செய்தார் என்றும் தலைவர் அவர்களால் நம்பமுடியாமல் இருந்ததை அவதானிக்கக்

கூடியதாக இருந்தது. “நான் பல துரோகத்தனங்களைச் சந்தித்திருக்கிறேன். துரோகிகளுக்கு

என்ன தண்டனை என்றும் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு விசரனுக்கு என்ன தண்டனை

என்று இனிமேல்தான் தீர்மானிக்கப் போகிறேன்” என சிரித்துக்கொண்டே தலைவர் அவர்கள்

தெரிவித்தபோது கருணைாவின் துரோகத்தனம் எமது விடுதலைப் போராட்டத்தையோ, தேசியத் தலைமையையோ எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

கேள்வி :-

கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை, திடீரென தோற்றம் கொண்டதாகக் கருத முடியாது இதற்கு நீண்ட காலத் திட்டம் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிந்ததா? இதற்குப் பின்னணியில் இனங்காணக்கூடிய சக்திகள் இருந்தனவா? இந்தப் பிரச்சினையை சிங்களத் தரப்பு எப்படி கையாள எண்ணியது?

பதில் :-கருணாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை நீ ண்ட காலமாகத் திட்டமிடப்பட்டிருந்ததாககருதமுடியாது. ஏனெனில் அவரது இறுதி முடிவு அத்தகைய ஒரு பின்புல உறுதிப்பாட்டோடு செயல்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. கருணா கடந்த காலங்களில் மட்டு அம்பாறை படையணிகளுடன் நின்று செயற்பட்டவர். அதிகமான காலப் பகுதியை காடுகளுக்குள் படையணிகளை ஒழுங்குபடுத்துவதிலும். அவர்களுக்கான கல்வி, பயிற்சி, தங்குமிட வசதிகளான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுவதிலேயே அதிகமான நேரத்தை செலவு செய்து வந்தார்.

இந்த சமாதான காலத்தில்தான் அவர் வெளியில் வந்து மக்களைச் சந்திக்கவும்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள கிழக்காசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும்

சென்று பல அறிமுகங்களைத் தேடிக்கொண்டார். இந்தக் காலப்பகுதிக்குள்தான் சிரீலங்கா

இராணுவத்தின் நெருங்கிய தொடர்புகளும் பேச்சுவார்தைகள் மூலமாகக் கிடைத்தது .

இதைத்தவிர வேறு எந்தப் பின்புல சக்திகளும் இவரின் பின்னணியில் நின்று செயற்பட்டதற்கான எந்த அறிகுறிகளையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை கருணாவின் தனிப்பட்ட மோசடிகளும், பலவீனங்களும் தேசியத் தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் அவசர அவசரமாக படைகளை களநிலைத் தளபதிகளோடு ஒழுங்குபடுத்தி முக்கிய தளபதிகளையெல்லாம் துார விலக்கிவைத்து தனது நம்பிக்கையானவர்களுக்கு மாத்திரம் தனது முடிவைத் தெரிவித்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் பிரதேசவாதத்தை போராளிகளுக்கு ஊட்டுவதற்கும் அரச அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டார். இராணுவ உயர் அதிகாரி பலேகல்லவுடன் அடிக்கடி தொடர்புகளை வைத்துக்கொண்டார்.

இதனைத் தவிர தளபதிகளையோ போராளியையோ ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டுத் தயார்படுத்தப்பட்ட அவரது முடிவுக்கு இறுதிவரை நின்று செயற்படக்கூடியவாறு விசுவாசமாக இருக்கவிலலையென்பதை அவரது இறுதி முடிவு எடுத்துக்காட்டுகிறது.

கருணாவை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிளவுபடுத்தி விடலாம் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை இல்லாமல் செய்துவிடலாம், இருதரப்பாகப் பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டலாம் எனும் திட்டத்துடன் சிரீலங்கா இராணுவம் பின்னணியில் இருந்து செயற்படுத்தியது.

இறுதியில் கருணா மட்டு-அம்பாறை மாவட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் தப்பி ஓடிசிரீ லங்கா இராணுவத்திLமே தஞ்சமடைந்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான முடிவை ஏற்படுத்தியிருக்கின்றார்.

கேள்வி :-

தமிழர் தரப்பு தேசியத் தலைவருக்குப் பின்னால் ஓரணியில் நின்றது என்ற அழுத்தமான செய்தி உாைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்தேசியம் ஒன்றுபட்டு தனது அபிலாசைகளை சனநாயக வழிமுறை மூலம் தெரியப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்திற்குள் பிளவை ஏற்படுத்த முனைந்த பிரதேசவாதப் பேய் விரட்டப்பட்டிருக்கின்றது. எல்லா வகையிலும் தன்னைப் புடம்போட்டு அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக தேசியத் தலைவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய இனம், சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காண காத்திருக்கின்றது. “தாயகம், தேசியம் தன்னாட்சி இறைமை எனும் தாரக மந்திரத்தில் தளராத உறுதியோடு தலைவரின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றோம்’ எனக் கூறுமாறு, புலம்பெயர் தமிழ் மக்கள் கூறிய செய்தியை என் மனதில் சுமந்து செல்கிறேன்” ஆனால், சிங்களம் இதற்கு இணங்குமா?

பதில் :-தமிழீழ மக்கள் தமிழ் தேசியத்தைப் பிரதேசவாதப் பேய்களின் பிடியிலிருந்து பாதுகாத்து, தமிழ் தேசியத் தலைமையை ஏற்று. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும் வலியுறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத்தீ ர்வைக்காண சனநாயக வழியில் தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் சிங்கள அரசுக்கும். அனைத்துலக சமூகத்திற்கும் அழுத்திக் கூறியிருக்கின்றார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி பீடத்தை அமைத்திருந்தாலும் இருவேறு துருவங்களாகப் பலமிழந்த நிலையில் சனாதிபதி சந்திரிக்கா விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாக நோர்வே அரசுக்கு அறிவித்துள்ளார் . இதய சுத்தியோடு தமிழ் மக்களின் ஆணையை , இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை அமுல்படுத்த இணங்குவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

கேள்வி :-

சுதந்திரக்கட்சி. ஜேவிபி கூட்டணி ஆட்சி நிலைக்குமா? இந்த ஆட்சி சமாதான முயற்சிகளில் எத்தகைய சாதக பாதக நிலைகளைத் தோற்றுவிக்கும்?

பதில் :-

சுதந்திரக்கட்சி. ஜே.வி.பி கூட்டணி ஆட்சி நாடாளுமன்ற அவையின் சபாநாயகர் தேர்விலேயே தங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது பலத்த இழுபறிக்கு

மத்தியில் எதிர்க்கட்சிக்கு தாரைவார்த்துவிட்டு முதல் கோணலைச் சந்தித்து நிற்கிறது .

ஜே.வி.பியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களான காணி

நீர்ப்பாசன விவசாய கால்நடை அமைச்சு மீன்பிடி நீர்வள அமைச்சு ,சிறிய கிராமிய

பொருளாதார அமைச்சு, கலாச்சார தேசிய உரிமைகள் அமைச்சுக்களையும், பிரதி

அமைச்சுக்களையும் சந்திரிகா தாம் செய்துவிட்டு பிச்சைப் பாத்திரத்தோடு நிற்கிறார்

சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் சமர்பிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இடைக்கால

தன்னாட்சி அதிகார சபையினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனக் கூறிய ஜே.வி.பி. யும்

பண்டா-செல்வா ஒப்பந்தமூலம் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைக்காண முனைந்த

சந்திரகாவின் தந்தையை சுட்டுக்கொன்ற பௌத்த பிக்குகள் போதிமரத்தை விட்டு எழுந்து

வந்து பாராளுமன்ற அரியாசனத்தி ல் அமர்ந்திருக்கும்போது, தமிழ் மக்களுக்கான தீர்வு

யோசனையைத் துணிவோடு பேசித்தீர்க்க முன்வருவாரா? என்பதும் கேள்விக் குறியாகத்தான்

இருக்கிறது

சனாதிபதி சந்திரிகாவும், எதிர்கட்சித் தலைவர் ரணிலும் பேசிக்கொண்டதற்கிணங்க

தேசிய நல்லிணக்க சபையினை நிறுவி பிரதமர் சந்திரிகா 1994 ஆம் ஆண்டு தமிழீழத்தில்

ஆரம்பித்துவைத்த சமாதானப் பேச்சுவார்த்தையை சனாதிபதி தனக்குள்ள இரண்டாண்டு

கால ஆட்சிக் காலத்திற்குள் தமிழ் களின் நிரந்தரத் தீர்வுக்கான முன் முயற்சி யாக தமிழ்

மக்களின் ஏக பிரதிநிதிக ளான தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவை அனைத்துலகங்களின்

அனுசரணையோடும். அனைத்து சிங்கள. தமிழ். முஸ்லீம் அரசியல் கட்சிகளின்

அங்கீகாரத்தோடும், சிங்கள மக்களின் ஆசீர்வாதத்தோடும் அமுல்படுத்த உறுதிபூனுவாராக

இருந்தால் இந்த நுாற்றாண்டின் இணையற்ற சமாதானத் தலைவியாக உலக மக்கள்

அனைவராலும் ஏற்றுப், போற்றிப் புகழப்படும் ஒரு பெரும் தலைவியாக வரலாற்றில்

புத்த தர்மத்தின் உண்மையான காருண்யத்தை உலகெங்கும் போதிக்கும்

பெருமைக்குரியவாராக பௌத்த மக்கள் வணங்கி நிற்பார்கள்

இதனைவிடுத்து சந்திரகாவுக்கு இருக்கும் சனாதிபதி பதவியின் இறுதி இரண்டாண்டு

காலத்தை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் இழுத்தடிக்க நினைப்பாராக இருந்தால்

மக்களுக்குள ஊ டுருவிப் பணிசெய்து ஆதரவைத் திரட்டவல்ல முக்கிய அமைச்சுப்

பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சி அடுத்த தேர்தலில் அமோக வெற்றியீட்டி

சிறிலங்கா அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கிவைப்பார்கள்

தமிழீழ மக்களும் பிரிந்துசென்று தனியரசை அமைப்பதைத் தவிர வேறுவழி இல்லையெனும்

நிலைக்குத் தள்ளப்படுவார்கள்

இறுதியாக எரிமலை இதழ் வாயிலாக புலம் பெயர்ந்து வாமும் தமிழீழ மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

அதேவேளை, இந்த மக்களிடம் இருந்து தேசியத் தவைருக்கு என்ன செய்தியைக் கொண்டு

செல்கிறீர்கள்?

பதில் :- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு இந்த எரிமலை இதழ் வாயிலாக நான்

சொல்லிக்கொள்ள விரும்புவது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்கள் உள்ளத்து

உணர்வுகளை அவ்வப்போது நடைபெறும் பொதுநிகழ்வுகளில் வெளிப்படுத்திக்

காட்டுவதுபோன்று எழுத்து வடிவிலும் தங்கள் ஆற்றலை இந்த எரிமலை இதழின் வாயிலாக

வெளிப்படுத்தி அனைத்துலக மக்களினதும் அறிவினையும், உணர்வினையும் வாசிப்பினுாடாக

வலுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத முனைக்குச் சமமாக பேனா முனையாலும்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தேசிய விடுதலைப் போரையும். தேசியத் தலைமையையும்

பாதுகாத்து. பலப்படுத்தி, வலுப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது

கொண்டுள்ள அளவற்ற அன்பையும், பாசத்தையும். பற்றையும் பார்த்தேன். தேசிய

விடுதலைப் போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டபோது புலம்பெயர் தமிழ் மக்கள்

கொதித்தெழுந்து தங்களது ஆவேச உணர்வை வெளிப்படுத்தி தாயக மண்ணின் பாசத்தை.

பற்றை வெளிப்படுத்தியிருந்தார்கள். “தாயகம், தேசியம், தன்னாட்சி இறைமை எனும் தார

மந்திரத்தில் தளராத உறுதியோடு தலைவரின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றோம் என

கூறுமாறு கூறிய செய்தியை என் மனதில் சுமந்து செல்கிறேன்

நேர்கண்டவர் :ஜெயா

வெளியீடு :எரிமலை இதழ்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”