நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

04-12-2016-02நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் வழக்கு ஒத்திவைப்பட்டதன் காரணமானது  வழக்கை விசாரணை செய்யும் நீதிபதிகள் உள்ளடங்கும் குழுவில் உள்ள நீதிபதி பிரியசாத் சுகயீனம் காரணமாக வருகை தராதமையினாலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(www.eelamalar.com)