1

உதவிகேட்டு_நிற்கின்றோம்!

நகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் திருமணம் முடித்து வாழ்வளித்திருக்கிறார்.

எனது மனைவி 17 வருடங்களாக போராட்டத்தில் இணைத்திருந்து இறுதியில் ஒரு கையை இழந்த நிலையிலும் வவுனியா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சில வருடங்கள் பூஸா சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனியாக ஒரு பெண் இங்கு பல தொந்தரவுகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு இச் சமூகத்தில் வாழ்வதென்பது எவ்வளவு பெரும் அவலம். எல்லாவற்றையும் தாண்டி தனக்கு துணை ஒன்று தேடாமல் எனக்கு துணையாக வாழ்க்கைப்பட்டு எனக்கு பார்வை அளித்துள்ளார்.

நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக்கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த பொருளாதார வளமுமின்றி நாம் அன்றாடம் செத்து செத்து பிளைத்துக்கொன்டிருக்கிறோம்.
நாம் உயிர்வாழ தகுதியற்றவர்களா என்று எண்ணி மனமுடைந்திருந்த நிலையில் இன்று இறுதியாக வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளாகிய உங்களிடம் உதவிகேட்டு நிற்கின்றோம்.

தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு செய்து எமது உயிர்வாழும் உரிமையை பெற்று க்கொடுங்கள்.
இப்படிக்கு
தங்களின் உதவியை நாடிநிற்கும்
திரு நகுலேஸ்வரன்
முள்ளிவாய்க்கால்
தொலைபேசி : 0094 77 595 72 45
Mrs. Naguleswaran Arulmeera
National Savings Bank
Account No.: 101300104124
Mullaitivu
Sri Lanka

Please share
அதிகம் பகிருங்கள் உறவுகளே…!