நாம் மீண்டும் தலை வணங்குகின்றோம். தலை சாய்க்கின்றோம்.

ஈழம்- தாயகத்து நிலைப்பாடுகள்

40 வருட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய சிங்கள அரசு, தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் கொத்து கொத்தாக கொன்று குவித்து ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க வைத்தது. அத்துடன் தமிழர்களை இன்னமும் பாகுபாட்டுடனேயே பார்த்து வருகின்றது.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இருந்து மக்களின் சர்வதேச முனைப்புக்களையும் புறக்கணிக்கும் வகையில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது. ஒரு பக்கம் யுத்த பாதிப்புக்கள் மறுபுறம் ஆளும் கட்சியின் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் எம் தமிழ் சமூகம் தாயகத்தில் பெரும்பாலான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

கடந்த 40 வருட காலத்திற்கும் அதிகமாக சிறுபான்மை தமிழர்களை கருவறுக்கும் முயற்சியில், சிங்களம் தங்கள் கைகளை அகல விரித்து செய்த கொடுரங்கள் ஓராயிரம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது,,
-தரவை புலிகள்