srilanka

எங்கள் வீரம் எங்கே,
“””””””””””””””””””””””””””””””

மண்ணின் வீரம்
வின்னில் உறங்குவதா,
மாண்டு போன கனவு
மீண்டும் முளைக்காதா,

கரிகாலன் சேனை
காற்றைக் கிழித்து வாராதா,
காதோரம் நமக்கொரு
தூது சொல்லாதா,

முள்ளிவாக்கால் முடிவில்லை – நம்
மூச்சும் அடங்கிடப் போவதில்லை,
இழப்புக்கள் நமக்கு புதிதில்லை
இருக்குடா எதிரிக்கு பெரும் தொல்லை,

கருவினில் வளர்வது புலியடா
கயவனே நீயும் புரிந்து கொள்ளடா,
கரிகாலன் சேனைகள் எங்கடா
கருவோடு வளரும் பிள்ளைகள் தானடா “

மீண்டும் வருவான் நம் தலைவன்
மிரட்சி கொள்ளும் சிங்களம்
நாளை நமதே ஈழம்
நம்பிக்கை கொள்ளடா புலியே நீ
தமிழன் என்ற அகந்தை கொண்டு “”

“””””””””””””””””””””””

ஈழமலர் செய்திக்கக ஈழவன் தாசன்

(www.eelamalar.com)