நிகழ்காலத்தில் வாழ்ந்த வீரத் தமிழன் தமிழர்களுக்கு ஓர்அடையாளத்தைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளான் – இயக்குநர் பாரதிராஜா!

நிகழ்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய வீரத் தமிழன் யாழ்ப்பாணத்தில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தைச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளான் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியல் கணினிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இது ஒரு தனி நாடாக பிரிந்திருக்கவேண்டியதற்காக போராடிய ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப் பெரிய தலைவனோடு இந்த மண்ணில் சில நாட்கள் தங்கியிருந்தேன்.

அந்த உணர்வுபூர்வமான விடயமே இன்று நான் ஈழத் தமிழர்களோடு பிணைந்திருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

இப்போது நான் அவற்றைக் கூறினால் பிழையான கருத்தாக மாறிவிடும். காரணம் இன்றைய சூழல் மாற்றமடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சியில் கணினிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இயக்குநர் பாரதி ராஜா சிறப்புவிருந்தினராகக் கலந்து சிறப்பித்து உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.