நிச்சயமாக அத்தகுதி உங்களுக்கு இருக்காது.

திருமண வயதை எட்டிவிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தனக்கு வரவேண்டிய கணவனைப் பற்றியும்,மனைவியைப் பற்றியும் பல கனவு கற்பனைகள் இருக்கும். அக்காலத்து ஈழத்து திருமணங்களும் அவ்வாறான எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் கொண்டிருக்கதான் வேண்டும்.

மணம் முடித்த தம்பதியரின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தைபேறு.மனைவி
கற்பமடையவில்லை என்றால் குழந்தைபேறு வேண்டி மருத்துவமனைகளிலும் கோவில்களிலும் அலைந்து திரிந்து தெய்வங்களை தங்கள் ஆசையை நிறைவேற்ற சொல்லி மனமுருகி வேண்டியிருப்பார்கள்.வாரிசொன்று வயிற்றில் தங்கிவிட்டால் அவர்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.அந்த காலக்கட்டத்தில் ஸ்கேன் வசதியெல்லாம் இல்லை.பிறக்கபோகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை முன்கூட்டிய அறியும் வாய்புகள் இல்லை.
மகன்தான் பிறப்பான் என்று மனுசியும் இல்ல மகள்தான் வேணும் என்று மனுசன் தங்கள் விருப்பங்களை பரிமாரிகொண்டு குதுகலித்திருப்பார்கள்.

மகள் பிறந்தால் இந்த பெயரும்,மகன் பிறந்தால் இந்த பெயர்தான் வைக்கவேண்டுமென்று அவர்களுக்குள்ளும் விவாதம் நடந்திருக்கும்.மாதங்கள் செல்ல செல்ல கருவுற்ற பெண்ணை குழந்தைபோல கவனித்து அவளது விருப்பங்களை தேடி தேடி நிறைவேற்றி தங்கள் குடும்பத்தில் புதிய வாரிதொன்று உதயமாகும் நாட்களை மிகுந்த ஆவலோடும் ஆசையோடும் எதிர்நோக்கி இருந்திருப்பார்கள்.

ஆணோ,பெண்ணோ குழந்தை நலமாய் இப்பூமியை கண்டபிறகு அக்குடும்பத்தில் குடிகொள்ளும் மகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளால் வெளிபடுத்துவதென்று எனக்கு தெரியவில்லை.ஆணோ பெண்ணோ பிறந்த அக்குழந்தையில் பாசத்தை கொட்டி வளர்பார்கள்,அக்குழந்தை முதன் முதலாக பிரண்டு படுக்கும்போது,முதன் முதலாக தவளும் போது,முதன்முதலாக எழுந்து நிற்கும்போது,முதல் முதலாக நடக்கும்போது,முதன் முதல் கதைக்கும்போது என பல சந்தர்பங்களில் அக்குடும்பம் மகிழ்ச்சியின் உச்சங்களை தொட்டு திரும்பியிருக்கும்.

சிறுவயது தொடங்கி வலிபனாக வளரும்வரை எந்த நோய்நொடியும் அண்டாது பாதுகாத்து பொத்தி பொத்தி வளர்திருப்பார்கள்.சிறுகாயம் என்றாலும் துடித்திருப்பார்கள்.தங்கள் பிள்ளையை டொக்டர் ஆக்க வேண்மென்றும்,வழக்குரைஞர் ஆக்கவேண்டுமென்றும்,பொறியல் பட்டதாரி ஆகவேண்டுமென்றும்,அல்லது அரசாங்க பணிகளில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் பலவிதமான ஆசைகளோடும் கனவுகளோடும் பேணிபாதுகாத்து வளர்த்திருப்பார்கள்.

ஒரு சராசரி பெற்றோரின் கனவு இதுபோலதான் இருந்திருக்கும்.வறுமையான குடும்பங்களில் பிள்ளை பெரியவனாக வளர்ந்து உழைக்க ஆரம்பித்துவிட்டால் தங்கள் கஸ்ஸரமெல்லாம் தீர்ந்துவிடும் என்றே நினைத்திருப்பார்கள்.

ஆனால் சிங்கள இனவாத அரசோ இவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.தன்னை பெற்ற தாய் தந்தையரை பேணவும்,அவர்களது ஆசைகளை நிறைவேற்றவும்,வாய்ப்புகளை வழங்கவில்லை.இனவாதம்,அடிமை வாழ்க்கை,படுகொலைகள்,பாலியல் வண்புனர்வுகள்,தாய்மண் ஆக்கிரமிப்பு இப்டியான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம்கொடுத்த இளைஞர்கள் விடுதலைப் போரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள்.
விடுதலை அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்கள்.

ஆனால் பெற்ற தாயாருக்கோ பார்த்து பார்த்து வளர்த்தபிள்ளை நாட்டுக்காக போராட போட்டார் என்ற செய்தியறிந்தால் எந்த தாய்தகப்பனுக்கும் கவலை ஏக்கம் தவிப்பு இருக்கதான் செய்யும். ஏனென்றால் நாட்டுக்காக போராட போனவையளுக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை.கோவில் கோவிலாக அலைந்து நேர்த்திகடன் வைத்து பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளை உயிருடன் இருக்கிறானோ இல்லையோ மீண்டும் தங்களை காண வருவானோ ஏன்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கதான் செய்யும். என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளையன்றோ
காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சன்றோ.

சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் புலியானவர்களில்,நாட்டுக்காக போராடி வீரச்சாவடைந்துவிட்ட மாவீரர்களில்
எத்ததனை டொக்டரோ
எத்தனை வழக்குரைஞரோ
எத்தனை நீதிபதியோ
எத்தனை சமூகசேவகரோ
எத்தனை சாதனையளரோ
எத்தனை விமானிகளோ
எத்தனை மாலுமிகளோ
எத்தனை விளையாட்டு வீரர்களோ
எத்தனை ஆராய்ச்சியாளர்களோ
எத்தனை விஞ்ஞானிகளோ
யாரறிவார்..

அவர்களையும் நம்மைப்போல்தான் பெற்று பேணிகாத்து வளர்த்தார்கள்.உயிரைவிட உரிமை பெரிது என்றெண்ணிதான் தலைவரின் ஆணையை ஏற்று நாட்டுக்காக கொடுத்தார்கள்.

புலிகள் என்றால் சண்டை பிடிப்பதற்காக மட்டுமே அல்லது சாவதற்காக மட்டுமே குளோனிங் முறையில் உருவாக்க பட்டவர்கள் அல்ல.புலிகள் வேற்று கிரகவாசிகளும் அல்லர்.அவர்களும் மனிதபிறவிகள்தான் உயிர்வாழ எத்தனிக்கும் அனைத்து ஆசைகளும் அவர்களுக்குமிருந்தது அதைவிட கடமை உணர்வும்,தலைவர் நினைப்பதை தங்கள் உயிரைகொடுத்தேனும் நிறைவேற்றவேண்டுமென்ற அர்பணிப்பே மேலோங்கி இருந்தது.

அவர்கள் மனிதர்களை விடவும் போற்றி பூஜித்து வணங்கவேண்டிய புனிதர்கள்.
நீங்கள் அவர்களை விமர்சிப்பதற்கு முன்னர் உங்களுக்கு அத்தகுதி இருக்கின்றதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

நிச்சயமாக அத்தகுதி உங்களுக்கு இருக்காது.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.