12

நிறைய இரத்தம் தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்

கொஞ்சம் இரத்தம் தாருங்கள்… நிறைய சுதந்திரம் தருகிறோம்’ என்றான் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ‘நிறைய இரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்’ ஈழத்திலே என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் தலைவர் பிரபாகரனின் கோரிக்கை.


ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள்….

புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா? ‘

என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது!’ என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என .. கடந்த ஒரு வாரமாக இந்திய போர்கப்பலை இலங்கைக்கு அனுப்பி சிங்கள இந்திய ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி இன்று தந்த கொண்டிருக்கிறது

இந்திய போர்வையில் வாழும் தமிழர்களுக்கு என்று தான் புரிய போகிறதோ ???
நாம் தமிழர்கள் என்று??

நாம் தமிழர்

ச.பிரபாகரன்

தமிழீழம்

எனது ஈழக் கனவு
தனித் தமிழீழம் வேண்டும் – அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப்
புன்னகை மலர வேண்டும்.

வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி
வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
சயனைடு எடுத்தக் கைகள் – இனிச்
சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச்
சாகும்படிச் செய்யக்கூடாது.

சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச்
சாந்தத்தோடு வாழ வேண்டும்.
ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள்
ஆலயம் நோக்கி நடக்க வேண்டும்.
வெடிகுண்டு ஏந்திய கைகள் – தமிழ்
வெண்பாட்கள் இயற்ற வேண்டும்.

குண்டு விழுந்த கானகங்களில் – குயிலின்
கானம் கேட்க வேண்டும்.
ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை – எந்நாளும்
தமிழினம் போற்றிப் பாட வேண்டும்.

மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் – இனியாவது
மனிதம் மலர வேண்டும்.
தனித் தமிழீழம் வேண்டும் – அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.

(www.eelamalar.com)