நீயாவது பத்திரமாக போய் சேர்ந்திடப்பா… –உண்மை சம்பவம்

கணமழை பெய்த காலம் ஒருநாள் 17பேர் கொண்ட போராளிகள்குழு கஞ்சிக்குடிச்சி ஆற்றுக்கு அந்த பக்கம் சிறியதோர் ராணுவ முகாமை தாக்கியழிக்க புறப்படுகின்றனர் கடுமையான மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கின்றது ஆயினும் போராடி நீந்தி அக்கரைக்கு சென்றுவிட்டனர். திட்டமிட்டது போலவே இராணுவ முகாம்மீது அதிரடி தாக்குதல் நடாத்தி வெற்றிகரமாக முகாமை தாக்கியளித்துவிட்டு இழப்பின்றி 17போராளிகளும் திரும்புகின்றனர். திரும்பி வரும்வேளை கடும்மழையின் காரணமாக அக்காட்டாற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது முன்பு இருந்ததைவிட அதிகமான அளவிற்கு வெள்ளம் ஆர்பரித்து ஓடுகின்றது ஆற்றை நீந்தி கடந்து போகமுடியாதென்ற நிலை ஆற்றிக்கு அந்த பக்கமாய் இருந்த எங்கட பெடியளுக்கு வாக்கி டோக்கியில் கதைத்து கயிறு கொண்டுவரச்செய்து ஆற்றின் இருகரையிலும் இழுத்துக்கட்டிவிட்டு அந்த கயிற்றை பிடித்துகொண்டே ஆற்றை கடக்கின்றார்கள்.

ஆர்பரித்து வரும் வெள்ளத்தோடு போராடி நட்டாற்றை கடந்துந்து கொண்டிருக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டுவந்த ஆமி துப்பாக்கி சூட்டோடு அந்த கயிற்றையும் அறுத்து விடுகின்றனர் 17பேரையும் காட்டாற்று வெள்ளம் இழுத்து செல்கின்றது.ஆற்றின் இரு கரையோரமும் மரங்களும் இல்லை செடிகளும் இல்லை ஒருவகையான சிறிய புதர்செடிகள் மட்டுமே அந்த புதர்செடியை போராளியொருவர் பற்றி பிடித்துக் கொள்கின்றார்.அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துகொண்டுவரும் மற்றுமொரு போராளியும் அந்த புதர் செடியை பிடித்துக்கொள்ள எத்தனிக்கின்றார் ஆனால் அந்த செடியை முதல் பிடித்திருந்த போராளிக்கு தெறியும் இரண்டுபேரையும் தாங்குகின்ற வலு அந்த செடிக்கு இல்லை என்பது.இரண்டுபேருமே ஒரே நேரத்தில் அந்த புதர்செடியை பிடித்துக்கொண்டால் செடி வேறோடு புடுங்குபட்டு இரண்டுபேரையுமே ஆற்று வெள்ளம் அடித்து சென்றுவிடும். வெள்ளத்தில் இழுத்து வரப்படுகின்ற மற்றொரு போராளி அந்த செடியை பிடிக்க கையை நீட்ட  முதலாவதாக அந்த செடியை பிடித்திருந்த போராளி நீயாவது பத்திரமாக போய் சேர்ந்திடப்பா என்று தன்கையை அந்த செடியிலிருந்து விட்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துசெல்லபடுகின்றார்.

இந்த பதிவை எழுதும் போதுகூட கண்ணீர் கொட்டுகின்றது.

உலகெங்கும் பரவி பறந்து விரிந்து வாழும் என் உயிர் தமிழ்சாதியே உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உறவினரின் பிள்ளைகள் பேரன்,பேத்திகள்,அவர்களுடைய பிள்ளைகள் இப்படி எல்லோருக்கும் தியாகம் என்றால் அதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் என்று சொல்லிக்கொடுங்கள். புலிகளின் நேர்மையையும், கண்ணியத்தையும்,ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும்,அர்பணிப்பையும்,வீரத்தையும்,தியாகங்களையும்,சாதனைகளையும் அவர்களுக்குள் விதையுங்கள்.பிறகு மிகச் சிறந்த ஒழுக்கசீலனாக உங்கள் பிள்ளைகள் வளருமென்பதில் ஐயமில்லை.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.