வேங்கைகளின் மூத்ததளபதியே…! வீரத்தின் மறுவுருவே…!
நீ கரிகாலன் தந்த சொர்ணம் அய்யா…!
ஒர் களத்திலே பல வர்ணமாய்…!

வேங்கைகளின் மூத்த தளபதியே
உறுதியின் உருவாய் பிறந்தவனே செங்குருதியில் அடிக்கடி குளித்தவனே

நீ கருவியை எடுத்தால் பகை முறியும் உன் பேராற்றலில் எதிரி சதி முறியும்

வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே
நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்
வேங்கைகளின் மூத்த தளபதியே
உந்தன் பார்வையில் வந்திடும் எதிரிக்கு காச்சல்
உந்தன் வீரத்தில் உயர்ந்தது தலைவரின் கரங்கள்
உந்தன் துணிவுகள் விடுதலைப்போரின் புலங்கள்
வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே
நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்
வேங்கைகளின் மூத்த தளபதியே
தலைவனை இமைபோல் காத்திருந்தால் தமிழ் ஈழத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றாய்

நீ செந்தமிழருக்காய் உருகும் மெழுகே சீருடை சிங்களத்தின் மூர்க்கழுகே
நீ செந்தமிழருக்காய் உருகும் மெழுகே சீருடை சிங்களத்தின் மூர்க்கழுகே
வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே
நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்
வேங்கைகளின் மூத்த தளபதியே
உந்தன் செவ்விழியில் ஒளி எங்கே நீ ஓங்கி விடும் அந்த மூச்செங்கே

பகைவர்கள் பணியும் தோற்றமெங்கே இங்கு நினைக்கையிலே வெந்து தவிக்கின்றோம்
இங்கு நினைத்து நினைத்து எரிகின்றோம்