6

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியை சேர்ந்த மகேஸ்வரனின் மனம் தளிர்க்குமா?

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியை சேர்ந்த இரத்தினம் மகேஸ்வரன் (46) என்பவர் போரினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 25 வருடங்களாக மீளத்துயரில் தவித்துக் கொண்டிருக்கின்றார். 1987ம் ஆண்டு வவுனியா மாவட்ட நெடுங்கேணி தண்டுவான் பகுதியில் இந்திய அமைதிப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டிருந்தது. அதை அறியாத மகேஸ்வரன் வியாபாரத்துக்காக மரக்கறிகள் கொள்வனவு செய்து கொண்டு நெடுங்கேணியில் இருந்து முள்ளியவளை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது தண்டுவானில் வைத்து இந்திய சீக்கியப் படையினரால் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகிய அப்பாவி பொதுமகனை இந்திய இராணுவத்தினர் துப்பாக்கியின் பின்பகுதியால் இடுப்பிலும் தலையிலும் தாக்கப்பட்டார். அதன்பினனர் மயக்கமைடைந்த மகேஸ்வரனை கிடங்கில் வைத்து இலைகுலைகலால் மூடிவிட்டு இந்திய இராணுவத்தினர் சென்றுள்ளனர். இடுப்பிலும் தலையிலும் ஏற்பட்ட தாக்கத்தின் காரணத்தால் நாளடைவில் படிப்படியாக பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

இடுப்பில் ஏற்பட்ட தாக்கத்தால் 36வயதில் இடுப்பிற்குகீழ் இயங்க முடியாத நிலையிக்கு தள்ளப்பட்டார். தலையில் ஏற்பட்ட தாக்கத்தால் மூளை நரம்பு பாதித்து படிப்படியாக உடல்உறுப்புக்களை செயல்இழக்கச் செய்துள்ளது. குறித்த நரம்புத்தாக்கம் குணப்படுத்த முடியாது என்று மருத்துவ அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பெரும் துயரில் தவித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரன் உணவை ரசித்து உண்ணும் நிலையில் உள்ளார். ஆனால் அவரை பராமரிப்பதற்கு மனிதவளமும் பொருளாதார வளமும் இல்லாதநிலை காணப்படுகின்றது.

8

அவருடைய தந்தை இரத்தினம் (80) தேநீர்கடையில் வேலை செய்கின்றார். பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் மகனை ஓரளவு பார்த்துக் கொள்கின்றார். அவருக்கும் வயதாகிவிட்டதால் மனஉளைச்சலும் வேதனையுடனும் காணப்படுகின்றார். தந்தையை மகன் பார்க்கும் நிலைமாறி வயதான தந்தை மகனை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. அடிப்படை வருத்தத்தின் காரணத்தால் மகேஸ்வரன் இறப்பதற்கு முன் பட்டினியால் இறந்துவிடுவதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றது.

 

தொடர்புகளுக்கு0094779353881
K.RATHINAM
A/C NO 71651600
BANK OF CEYLON
NIC:363410030v

7

(www.eelamalar.com)