பத்தாவது முறையும் தோல்வியை தழுவிய சம்பள பேச்சுவார்த்தை?

013கடந்த 18 மாதங்களாக இழுபறியுடன் நடைப்பெற்ற தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாக இன்று காலை 11 மணிக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வரை அறிக்கைகள் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்த கூட்டு ஒப்பந்த பங்காளர்கள்  இன்று நிச்சயம் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு வரும் என்றும் எப்படிப்பட்ட தொகையை பெறப்போகின்றார்கள் என்பதை ரகசியமாக வைத்து கொண்டதோடு இன்று இந்த தொகையை வெளியிடப்போவதாக அறிவித்தது. ஆனால் கிடைக்க போகும் தொகை மிகவும் சிறிய தொகையாகவே இருக்கும் என நாம் நேற்று சந்தேகம் வெளியிட்டிருந்தோம்.

அதே போல் தோட்ட மக்களுக்கு கடுமையான போராட்டத்தை நடாத்தியே இந்த தொகையை பெற்றது போல் காட்டவே இந்த நாடகத்தை இ.தொ.கா ,தே.தோ.தொ.ச, மற்றும் கூட்டு கமிட்டி நடத்துவதாக தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். இந்த மக்களை வைத்து இனி நாடகம் ஆடாது நியாயமான சம்பள உயர்வை பெற்றுகொடுக்க முடியாவிட்டால் இவர்கள் உடனடியாக தலைமைப்பதவியைவிட்டு ஒதுங்குவதே சிறந்தது என தோட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

(www.eelamalar.com)