பயங்கரவாத தடை சட்ட முன்வரைவு –ஐ நா கவலை

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கரிசணை கொண்டுள்ளது.

சட்டத்தரணிகள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணித்தியாலங்களாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களில், புதிய அரசமைப்பு வரைவு கவலை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.