பல நூறு இன்னுயிர் காத்த ஓர் உன்னத வைத்தியர் காந்தன்.

“அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது.

சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது.

விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும்,இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்…

அஞ்சாத நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளாத தேவர்களாய் செயலாற்றிய மனிதர்களைப் பற்றி அடியேன் சொல்லியே ஆகவேண்டும்.

அந்த உன்னத மானுடப் பிறவிகளில் மிகவும் முக்கியமானவன் வைத்திய கலாநிதி காந்தன் குணரத்தினம்.

பஞ்சமும், பட்டினியும் எம்மை பாதித்த வேளைகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி செயற்பட்ட காலங்கள் எழுத்தில் வடிக்க முடியாத �வேதனை மிக்கவை.

அந்த நேரங்களில் ஓர் விளக்கேந்திய பெருமகனாக �துன்பத்தில் துவண்ட மக்களுக்கு உற்ற துணையானவன் எங்கள் மருத்துவர் காந்தன்.

Dr காந்தன் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

இங்கே தமிழீழ மருத்துவக் கல்லூரி பற்றி சொல்ல வெண்டும். முதல் மாவீரன் சத்தியநாதன் சங்கர் காயம் பட்டு அதிக குருதிப் பெருக்கால் வீரச்சாவு அடைந்த காலத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க ஓர் வைத்தியர் குழாமை உருவாக்கும் தேசியத் தலைவர் அவர்களின்ஓர் கனவுதான் தமிழீழ மருத்துவக் கல்லூரி ஆகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் அழகய்யா துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தின்�நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது.

பல நூறு இன்னுயிர் காத்த ஓர் உன்னத வைத்தியர் காந்தன் மன்னார் சிலாவத்துறை அரசினர் வைத்தியசாலையில் பணி புரிந்தவர்.

வசதி வாய்ப்புகள் குறைந்த பிர்தேசமென பல வைத்தியர்கள் செல்ல விரும்பாத நேரத்தில் காந்தன் ஆற்றிய சேவையை சிலாவத்துறை பிரதேச மக்கள் பெருமனதுடன் நினைவு கூருவர்.

மாங்கனித்தீவின் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென் தமிழீழத்தின் கதிரவெளி, வாகரை வைத்தியசாலைகள் தொடக்கம் வடக்கின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வைத்தியசாலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அங்கெல்லாம் நின்று சேவையாற்றியவர் லெப் கேணல் காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருங்கக் கூறின் தமிழர்தாய் நிலத்தில் எங்கெல்லாம் கூக்குரல் கேட்டதோ அங்கெல்லாம் துன்பம் போக்கிய பெருமகனார் காந்தன்.

தமிழீழ மருத்துவர் மருத்துவர் காந்தன் 2009ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 5 ஆம் தேதி �தேவிபுரத்தில் நடைபெற்ற தாக்குதலில் ��காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிக்கும் போது குண்டுபட்டு படுகாயமடைந்து வீரச்சாவு அடைந்தார்.

தாம் நேசித்த மக்களுக்காக தம் இன்னுயிர்களையே ஈந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்கர்ளே!

நன்றி.

– வயவையூர் அறத்தலைவன் –