பாரெங்கும் பார்த்திராத ஒப்புயர்வில்லாத தலைவர் எங்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.

பிடல்காஸ்ட்ரோ என்ற மாபெரும் புரட்சியாளனின் உயரிய தியாகமும் மனவுறுதியும் எம்மை மெய்சிலிர்க்க வைத்தாலும் அடிமைத்தனத்தின் வலியை நன்கு உனர்ந்த கியூபா எமது ஈழவிடுதலைக்கு எதிராக களமிறங்கியது மிகுந்த மனவலியை தருகிறது.
.
உலகின் எந்தவொரு விடுதலைப்போராட்டத்திலும் அந்த விடுதலைப்போரை நடத்தும் அமைப்புகளுக்கு எதாவதொரு வல்லரசு பக்கபலமாக இருந்து ஆயுதஉதவி, படையனி உதவி, பொருளாதார உதவி போன்ற சகலவிதமான உதவிகளையும் மிகத்தாராளமாக வழங்கிக்கொண்டேயிருந்தன. இதுதான் சரித்திரம் எமக்கு கற்றுத்தந்த பாடம்.
.
உதாரனமாக வடவியட்நாம் தென்வியட்நாம் போரில் இரு வியட்நாம்களுக்கும் பின்னால் அமெரிக்காவும் சீனாவும் ஆயுதஉதவி, படையனி உதவி, பொருளாதார உதவி போன்ற சகலவிதமான உதவிகளையும் மிகத்தாராளமாக வழங்கின..
.
ஆப்கானிஸ்தான் போரில் அங்குள்ள விடுதலை அமைப்புகளுக்கு சகலவிதமான உதவிகளையும வழங்கி அவற்றிற்கு பின்னாலிருந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக தமது பலப்பரீட்சையை நடத்தின.
.
இதேபோலத்தான் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக்கரைப்பதற்காக கியூபாவின் அதிபர் பிடல்காஸ்ட்ரோவுக்கும் ரஷ்யா சகலவிதமான உதவிகளையும் அதாவது ஆயுதஉதவி, படையனி உதவி, பொருளாதார உதவி போன்ற சகலவிதமான உதவிகளையும் மிகத்தாராளமாக தங்குதடையின்றி வழங்கிக்கொண்டேயிருந்தது.
இதன்காரணமாகத்தான் அமெரிக்கா என்ற பயங்கரவாதப்பசாசை கியுபாவினால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
.
ரஷ்யாவின் பக்கபலம் மட்டும் பிடல்காஸ்ட்ரோவுக்கு கிடைக்காமல்போயிருந்தால் அமெரிக்கா என்ற பூதம் என்றோ கியூபாவை பூ என ஊதித்தள்ளியிருக்கும்..
.
ஆனால் உலக விடுதலைப்போராட்ட வரலாற்றில் எமது தமிழ்ஈழவிடுதலைப்போராட்டம் மாத்திரமே உலகின் எந்தவொரு வல்லரசினதோ அல்லது எந்தவொரு நாட்டினதோ பக்கபலமின்றி நடத்தப்பட்ட முதலாவது விடுதலைப்போராகும்.
.
தனது 64வது பிறந்தநாள் கண்ட எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனுக்கோ அல்லது அவர்தம் விடுதலை அமைப்பான தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கோ எந்தவொரு வல்லரசும் ஒரு சிறுதுரும்பைக்கூட கிள்ளிப்போட்டது கிடையாது..
மாறாக அனைத்து வல்லரசுகளும் எமது விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக கைகோர்த்து ஆயுதங்களையும் பணபலத்தையும் அள்ளிக்கொட்டின. அதுமட்டும் போதாதென்று தமது நாட்டு படையனிகளையும் எமது மண்ணில் களமிறக்கின.
.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கலங்காமல் மிகுந்த மனவுறுதியுடன் செய் அல்லது செத்துமடி என்று கூறும்வண்ணம் இறுதிவரை நின்று களமாடினார் எங்கள் தேசியத்தலைவர்.
.
இறைவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பார்களே அதேமாதிரித்தான் எமது தேசியத்தலைவரும்.
.
பிடல்காஸ்ட்ரோவாக இருந்தாலென்ன சேகுவேராவாக இருந்தாலென்ன மாவோசேதுங்காக இருந்தாலென்ன கால்மாக்ஸாக இருந்தாலென்ன அல்லது லெனினாக இருந்தாலென்ன இப்படி எந்தவொரு புரட்சியாளனை எடுத்துக்கொண்டடாலும் இவர்கள் யாருமே எமது தேசியத்தலைவருக்கு நிகராகவோ அல்லது மேலாகவோ ஒருபோதும் இருக்கமாட்டார்கள்.
.
பாரெங்கும் பார்த்திராத ஒப்புயர்வில்லாத தலைவர் எங்கள் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.