பிடலும் பிரபாகரனும் 

தேர்ந்தெடுத்துக்கொண்ட
பாதைகளில் நாம் நேர்த்தியாய் பயணிக்கையில்
அதிகார வர்க்கத்தில் சலசலப்பு ,

வாங்குவதற்கும் விற்பதற்குமல்ல
சுந்தந்திர தாகமும் கீதமும் ,
சுடுகாடு வரை பிணம் செல்லும் ,

தோழர்களே சூடு காட்டிலும் சுதந்திரத்துக்காய் போராடுவோம் தமிழிழம் எனும் வார்த்தைக்குள் சமாசாரம் அற்று ,

\பொய்கையோயைத்தேடி மான்கள் போவதும்
வேடர்கள் காத்திருப்பதும் இயற்கையின் நியதியல்ல\
இயற்க்கைக்கு பிறம்பானவை என்றறிதலில் உணர்வதே
மானுட விடுதலையாகும்

அதுவானது புலால் தின்னும் மாந்தர் கூடத்தின் மகிமையாகும்
\ இனத்துக்கான
விடுதலை பாதையென்பது இருளின் நடுவே ஒளிகளை தேடி
கல்லிலும் முள்ளிலும் காயப்பட்டு வெளிச்சத்தை உணர்வது இல்லை
இறப்பை தேடுவது என்பதே நியதியாகும் ,

சிந்தித்து செயலாக்குவதற்கும்
சிந்தனைகளை விரிப்பதற்கும் பொதுவுடைமை வாதம் என்பவை
அரசியல் வாக்கு சாவடியில் காத்திருக்கும் கன்னியமற்ற மனிதர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு பலியாகும் மக்களைப்போலல்ல
சிந்திக்கும் இடை வெளிகளில் வலிந்து வரும் ஒட்டுண்ணிகளின் எரிதலும் பொறாமையையும் தகர்த்து நேர்வழியில் செல்வதே விடுதலை சிந்தையாகும் ,,

இந்தநிலைகளில் உருப்பெறும் உன்னதர்களில்
மாவோ சேகுவாரா பிடல் காஸ்ரோ இவர்களுக்குமேலாய் பிரபாகரன்
அதவது
தன்னலமற்ற தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் போன்றோரின்
சிந்தனைகளை தாங்கி நடப்பேதே உண்மை விடுதலையின் ஒரு படிமத்தின் பார்வையாகும் ,

இனியொரு பிரபாகரன் போல் சுயநலமில்லா
மானிடர் தோன்றுவதென்பது அரிதிலும் அரிது ஆனாலும்
அவர் சிந்தனைகளை உங்களால் சுமந்து பாதைகளை செப்பனிட முடியும்
என்பதே வரலாறு கற்பிக்கின்ற படமாகும் என்பதை உணர்ந்து முன்னேறுங்கள் தோழர்களே வெற்றி எம்மக்களை எமது மக்களுக்காகட்டும் ,
யே , தாசன்