Fotor0301132149

பிரபாகரனும், பொட்டு அம்மானும் மீண்டும் வந்தால்!

விடுதலை புலிகளை அழித்து ஒழித்துவிட்டோம் என விளம்பரம் செய்த அரசும், அதன் தலைமைகளும் பிரபாகரனின் உடல் அமைப்பை கொண்ட ஒரு உருவத்தையே காட்டியதாக அநேகமான தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். இதற்கு சான்றாக இந்திய அரசும், ரஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பிரபாகரனின் பெயரை நீக்க இலங்கை அரசு கொடுத்த கடிதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை..

இன்றுவரை இறப்பு சான்றிதழ் வழங்கப்படவும் இல்லை. இவர் மறைந்து விட்டார் என்றே நம்பப்படுகின்றது. அதேபோல் பொட்டு அம்மான் சம்பந்தமாகவும், அதே நிலைதான் உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் வருகை தந்துவிட்டால்…..? தமிழ் தலைவர்களும், இலங்கை மற்றும் சர்வதேசமும் என்ன செய்யும்?  இந்த சந்தேகம் நாளுக்கு நாள் துளிர்விடத் தொடங்கி விட்டதற்கான செய்திகள் கசிந்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இவ்விடயம் கருணா, பிள்ளையான் போன்றவர்களை மன ரீதியாக பாதிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

(www.eelamalar.com)