thalaivaa

இதயத்தில் வலிகொண்டு துடிக்கின்றோம்.
இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

இதயத்தில் வலிகொண்டு துடிக்கின்றோம்
இருகரம் கூப்பி அழைக்கின்றோம்
மீட்பரே நீயின்றித் தவிக்கின்றோம்
விரைவாக வாருமையா எமக்கு
வல்லமை தாருமையா.

மண்புழுவாக மாண்ட
தமிழர் மரபை
வெண்ணிலவாக வெளிச்சமிட வைத்தவரே
வீதிகள் தோறும்
விடுதலை கீதம் இசைத்தவரே
தமிழர் விடுதலையின் கதிரவனே
மௌனமேன் தலைவனே?????????

முன்னொரு காலத்தில்
வேட்டிகளைச் சிங்களவர் உருவ
வீதிகளில் அம்மணமாக அலைந்தோம்
களட்டிய கோவணத்தைத் தரும்படி
கெஞ்சிக் கதறி அழுதோம்
இன்று உருவப்பட்ட கோவணத்துக்காக
எவரிடமும் நாம் கையேந்தியதில்லை.
அம்மணமாகப் போராடும்
ஆத்ம பலத்தை நீ கொடுத்தாய்.

அதிசய மனிதனாய்
நீ வெடித்தாய்.
கற்காலக் காட்சிகள் உன்
பொற்கால ஆட்சியில் எரித்தாய்.
மீண்டும் கற்காலாம் திரும்புகின்றன.
தமிழர் வேட்டிகள்
வீதிகளில் வைத்தே
அவிழ்க்கப் படுகின்றன
குண்டுகள் உள்ளதா? எனக் கேட்டு
பெண்டுகள் மார்புகள் சிங்களத்தால்
தொட்டுப் பார்க்கப் படுகின்றன
வீரியம் மிக்க தமிழினத்தின்
சோதியான சூரியனே
மௌனம் ஏன்?????

இதயத்தில் வலிகொண்டு துடிக்கின்றோம்
இருகரம் கூப்பி அழைக்கின்றோம்
கடவுளே பிரபாகரனே
விரைவாக வாருமையா
எமக்கு வல்லமை தாருமையா.!

புரட்சிப்புயல்