பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும்! -கம்மன்பில

வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.