8

பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல நம்பிக்கைக்கு இன்னொரு நாமம்.

உதைத்த காலுக்கு முத்தமிட்டுகிடந்த இனத்தின் ஓரத்தில் நெருப்பு பொறியொன்று நீருபூத்து கிடந்தது
ஓம் அது எம் அண்ணண் பிரபாகரன்

மானம் பெரிதென்ற மகுடம் அவன் தலையில்

ஈனம் துடைக்கின்ற ஈறுமாப்பு அவன் நெஞ்சில்

வானம் இடிந்து விழுந்தாலும் வளையாத மணமுண்டு

வரிவேங்கைபடை வென்று வருமென்ற திடமுண்டு

எத்தனைப்பேர் அவருடன் வந்தார்கள் பின் சென்றார்கள் கூட இருந்தவர்கள் அகன்றபோதும் ஆடவில்லையே இந்த ஆலமரம்.வென்று காட்டுவேன் என்ற தைரியமும் செல்வேன் என்ற துணிச்சலும் இவ்வல்லமை மைந்தனுக்கு வாய்க்காவிடில் ஓட்டு மொத்தத தமிழினத்திற்க்கும் என்றோ ஆண்டுதிவசம் முடிந்திருக்கும்.

பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல நம்பிக்கைக்கு இன்னொரு நாமம்.

-பிரபா