பிரிகேடியர் விவகாரம்; ஐ.நாவுக்கு மனு!

பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னாண்­டோ­விற்கு எதி­ராக, நீதி மற்­றும் உண்மை செயற்­திட்­டம் அமைப்­பின் யஸ்­மீன் சூகா, ஐ.நாவுக்­கும் பிரிட்­ட­னுக்­கும் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளார் என்று சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பிரிட்­ட­னுக்­கான இலங்­கைத் தூத­ர­கத்­தின் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பிரி­கே­டி­யர் பிரி­யங்க கட­மை­யாற்றி வரு­கின்­றார். சுதந்­திர தின நிகழ்­வு­க­ளின் போது பிரி­கே­டி­யர் பிரி­யங்க, புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் கழுத்தை அறுப்­ப­தாக சைகை செய்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பிரி­கே­டி­யர் பிரி­யங்­க­வுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி யஸ் மின் சூகா அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளார். முல்­லைத் தீவு வைத்­தி­ய­சா­லையை போரின் போது தாக்கி அழித்­த­தாக பிரி­கே­டி­யர் பிரி­யங்க மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குற்­றச் சாட்­டுக்­கள் தொடர்­பில் ஏழு பக்­கங்கங்களைக் கொண்ட அறிக்­கை­கள் பிரிட்­ட­னுக்­கும், ஐக்­கிய நாடு­கள் அமைப்புக்கும் சமர்ப்­பிக்கப்­பட்­டுள்­ளது – என்று அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.