பிரித்தானியாவில் அறிமுகமாகிய காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத் தொகுப்பு நூல்

காந்தள் கரிகாலன் எனும் தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூலானது காந்தள் புலம்பெயர் இளையோரின் ஒழுங்கு படுத்தலில் காந்தள் வெளியீட்டுப்பிரிவினால் பிரித்தானியாவில் உள்ள“Crystal Events & Management,1, Poppin Business Centre, South Way, Wembley HA9 0HB” எனும் இடத்தில் 04.03.2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் தமிழீழத்தின் முதல் வித்தான லெப்.கேணல் சங்கர் அவர்களின் தந்தையார் திரு.செல்வச்சந்திரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தும்,முன்னால் போராளியான திரு.அமலதாஸ் அவர்களால் தமிழீழ தேசியக்கொடியினை ஏற்றியும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அத்துடன் வரவேற்புரையினை தேசிய செயற்பாட்டாளர் திரு.சுப்பிரமணியம் சுரேஸ் வழங்கியும், தலைமையுரையினை இந் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய காந்தள் குழுமத்தில் ஒருவரான தேசிய செயற்பாட்டாளர் திரு.வேதநாயகம் சஞ்ஜீவ தனுஷன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் நூலினை ஈகைப்பேரொளி முருகதாஸ் அவர்களின் தாயார் திருமதி.சிறிபிவனேஸ்வரி அவர்கள் காந்தள் குழுமத்தினரான திரு.நற்குணம் கார்த்திக் மற்றும் திரு.இரத்தினேஸ்வரன் சிந்துஜன் அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்க முதற் பிரதியினை தமிழீழத்தின் முதல் வித்தான லெப்.கேணல் சங்கர் அவர்களின் தந்தையார் பெற்றிருந்தார். பின்னர் சிறப்புப் பிரதிகளை பல ஊடகவியளாளர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் பெற்றனர்.

மேலும் நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் நடனங்கள், கவிதைகள், காந்தள் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் தமிழீழ தேசத்து எழுச்சிப்பாடகர் திரு மயூரன் சதானந்தன் அவர்களின் தமிழீழ எழுச்சிபாடல்களும் இடம் பெற்றன. நிகழ்வின் இறுதியாக இந் நிகழ்வை ஒழுங்கமைத்த மற்றுமொரு காந்தள் குழுமத்தின் உறுப்பினரான கணேசலிங்கம் குகறூபன் அவர்களால் நன்றியுரையினை வழங்கி வைத்து நிகழ்வு நிறைவு செய்துவைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வினை ஒலி, ஒளிப்பதிவு மற்றும் மண்டப ஒழுங்குகளைச் செய்தவர் காந்தள் குழுமத்தின் உறுப்பினர் பரமலிங்கம் சாதீசன் என்பது குறிப்பிடத்தக்கது.