பிரித்தானியாவில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டம்….

ஶ்ரீலங்கா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஶ்ரீலங்காவுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள ஶ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக 09.02.18 வெள்ளிக்கிழமை அன்று புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீலங்கா  சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள ஶ்ரீலங்கா தூதரத்துக்கு  முன்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருந்தார் .

பிரிகேடியர் பிரியங்கரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட  பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
லண்டன் நகரே தமிழீழம் என்ற கோஷத்தில் அதிர்ந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

தமிழீழம் வெகு தொலைவில் இல்லை இப்போராட்தில் நாம் கண்ட உண்மை…

தமிழா தொடரட்டும் உங்கள் போராட்டம்…
வளரட்டும் உங்கள் ஒற்றுமை…
வெல்லட்டும் தமிழீழம்…

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.