பிரித்தானியாவில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன ஒன்றுகூடல்

இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவினைப் பலப்படுத்தும் நிகழ்வு…

இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் Sri Lanka Monitoring Accountability Panel (MAP)கரங்களைப் பலப்படுத்தும் நிகழ்வொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைகளை இப்பன்னாட்டு கண்காணிப்பு குழு கண்காணித்து வருகின்றது.

சுதந்திரமான செயன்முறையினைக் கொண்ட இப்பன்னாட்டு நிபுணர் குழுவின் செயற்பாடுகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பொருட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும், உரிமைக்குமான போராட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இதன்போது, பல்வேறு மனிதவுரிமைவாதிகள், சட்டத்தரணிகள், இலங்கை விவகாரத்தில் தேர்ச்சி பெற்ற பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்(TGTE) ஏற்பாட்டில் 11.02.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 வரை Sun Lounge, Atlip Centre, 1, Atlip Road, Wembley, HA0 4LU என்னும் இடத்தில் இடம்பெற்றது.