பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.

02.11.2007 அன்று கிளிநொச்சி சமாதான செயலகத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் வான்படைத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட  லெப்.கேணல் அன்புமணி/அலெக்ஸ், மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன்/நேதாஜி, மேஜர் செல்லத்தம்பி/செல்வம், லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய 12ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்,

தமிழீழ மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் ஞாயிற்றுகிழமை (03.11.2019) St Barnabas Church, The Fairway, Northolt, UB5 4SX (UK) எனும் இடத்தில் பிற்பகல் 6மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.

பொதுச்சுடர் மற்றும் தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இன் நிகழ்வு, அதனைத் தொடர்ந்து தேசிய விடுதலைக்காக தங்கள் இந்நுயிர்களை ஈர்ந்த மாவீரச் செல்வங்களுக்கும், அப்பாவிகளாக படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும், நாட்டுப் பற்றாளர்ளுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடர் மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.  

பின் மண்டபம் நிறைந்த மக்கள் வரிசையாகவந்து திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்தூவி தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். 

இன் நினைவு வணக்க நிகழ்வில் ஏராளமான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.