முழுத்திருடர்களையும் விட்டுப் போட்டு பச்சைப் பிள்ளையள சிறை வைக்கினம்: யாழ்ப்பாணத் தம்பி

முழுத்திருடர்களையும் விட்டுப் போட்டு பச்சைப் பிள்ளையள சிறை வைக்கினம்: யாழ்ப்பாணத் தம்பி:-

பெரிய பெரிய ஊழல்களை செய்தவையளையும் பெரிய பெரிய கொலைகளை செய்தவையளும் நல்லா கொழுத்துப் போய் திரியிறினம்.. ஆனால் அப்பாவியள சிறையில அடைச்சு நீதியை நிலை நாட்டுறதில மகிந்த அரசுக்கு மைத்திரி அரசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லைப் போல கிடக்குது….

பிறகென்ன?

சிகிரியா சுவரில அந்தப் பிள்ளை தெரியாமல் தன்ட பெயரக் கிறுக்கிப்போட்டுது.. அதுக்கு அந்தப் பிள்ளைக்கு இரண்டு வருச சிறை தண்டனையாம்… என்ன அநியாயம் இது?
அதுகள் சித்தாண்டியில சரியான கஷ்டப்பட்ட குடும்பம். வீட்டில எல்லாம் பொம்பிளைப் பிள்ளையள். ஒரு பொடியன் சகோதரன். அவரும் கூலி வேலை… இந்தப் பிள்ளையின்ட சம்பளத்தில அன்றாட நாட்கள நகர்திற குடும்பம்….
அந்தப் பிள்ளைய பிடிச்சு சிறையில அடைச்சு நீதியையும் வரலாற்றையும் பாதுகாக்கிறினமாம்…
முழுக்க முழுக்க ஊழல் செய்தவன்களை கௌரவாமாய் இருத்தி வாக்குமூலம் பதிவு செய்துபோட்டு ஒரு இரண்டு மணித்தியாலத்தில ஊழல தொடர அனுப்பிறினம்…

பள்ளிவாசல்களையும் கோயி்ல்களையும் உடைச்சவையள கும்பிட்டு பாதுகாக்கிறினம்… ஓ.. முந்த நாளும் மலையகத்தில ஒரு கோயில உடைச்சினம்… அதுகளுக்கு பேசாமல் காலம் காலமாய் செய்யி விசாரணையள செய்வினம்…எங்கட மக்களை கொலை செய்வையள் பாதுகாப்பம் எண்டு சொல்லுற அரசாங்கம் எப்பிடி இந்தப் பிள்ளைக்கு நீதி குடுக்கும்? இதுதானே இவையின்ட நீதி. ஆளுக்கொரு நீதி.

இராணுவம் எங்கட நிலத்தை அபகரிச்சுப் போட்டு எத்தின கலாசார வரலாற்றுச் சின்னங்கள உடைச்சவைள். கோயில் கருவறைக்குள்ள கழுபண்டா என்று பெயர் எழுதிப் போட்டு போனவையள்… கேட்டால் வெள்ளை அடிச்சுட்டு பூசை செய்யுங்கோ என்பினம்…

யாழ் நூலகத்தை எரிச்சுப் போட்டு வெள்ளை அடிச்ச மாதிரி???

எங்கட வரலாற்றில திட்டமிட்டு வெள்ளை அடிக்கிறவையள் தெரியாமல் அந்த பிள்ளை விட்ட பிழைக்கு உந்த தண்டனையே குடுக்கிறது?
அந்தப் பிள்ளைக்கு கருணை காட்டவேணும்…
எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல் இலங்கை அரசாங்கத்த அந்த பிள்ளைய விடச் சொல்லி வலியுறுத்துங்கோ…

யாழ்ப்பாணத் தம்பி