புறநானூற்று வீரத்தை புலிபாய்ச்சலில் காட்டிய வீரன்….!!!

வரலாற்று சிறப்பு
வெற்றிகளங்களின்
நாயகனே..

முத்து முத்தாய்
பெற்ற வெற்றிகளின்
வியர்வை நதியே..

சமர்கள சாணக்கியனே
சிங்ககொடியின்
சிம்மசொப்பனமே..

தலைவர் தமிழீழக்
கனவின் பாதி
நம்பிக்கையே..

சிங்களன் கனவிலும்
கிலியனவனே..

மிகச் சவாலான
களங்களின் பொறுப்பை
உன்னிடத்தில் ஓப்படைத்துவிட்டு
உனக்கு தன்ஆலோசனைகள்
அவசியபடாது என்றெண்ணி எம் தானைத் தலைவன் நிம்மதியாய் உறங்க செல்வானே..

எந்நேரமும்
எத்திசையிலும் சாவை
சந்திக்கும் களங்களில்
சுழன்றாடியவன் நீ

ஆட்லறி பீரங்கிகளும்
விமான குண்டுவீச்சுக்களும்
சுற்றிவளைப்புகளும்
டாங்கிகளும்
ஆமிஎண்ணிக்கையும்
சிங்களவனின் விதவிதமாக
வெளிநாட்டு பயிற்சிகளும்
அதிநவீன போர்கருவிகளும்
வீழ்த்த முடியாத உன்னை
நோய் வென்றதெப்படி
விளங்கவில்லை இன்னும்
வியப்பும் அடங்கவில்லை

சிங்களன் உன்னிழப்பை
இனிப்பு வழங்கி
கொண்டாடினனாமே
அந்தளவிற்கு சிங்களன்
இறுமாப்பை சிதைத்தவன் நீ..

தாயை விஞ்சிய
சேயாகி அதை
அந்த தாயே கூற
காதுகுளிர கேட்டவனே..

இதைவிட என்ன
பெருமை வேண்டும்
உனக்கு
நீ நிண்டிருந்தால்
விடிந்திருக்கும்
ஈழக்கிழக்கு..

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.