unnamed

எமது தலைவரால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பை ஏன் நாம் இம்முறை நிராகரிக்கின்றோம்?

இதோ அதற்கான பதில்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் எமது தலைவர் தான் உருவாக்கினார். அதற்காக அதில் அங்கம் வகித்த உயர்நிலை, கீழ்நிலை போராளிகள் சிலர் விட்ட தவறுகளை எமது தலைவர் தண்டிக்காமல் வளர்க்கவில்லை என்பதனை நீங்கள் யாவரும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். அத்தோடு அவ்வமைப்பிற்கு கட்டுப்படாத அல்லது அவ்வமைப்பிற்கு இழுக்கினை ஏற்படுத்திய எவரையும் பாரபட்ச்சமின்றி எமது தலைவர் அவர்கள் தண்டித்திருந்தார். இதனால் தான் இன்று பல துரோகிகளும் எம்மால் இனங்காணப்பட்டுள்ளனர். இங்கே தரதராதரம் எல்லாம் ஒரு பொருட்டாகப் பார்க்கப்படவில்லை.

அப்படியானால் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்குள் தான் அவர்களும் இருக்க முடியும். இங்கே இன்னொரு விடையத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். அது என்னவெனில், இங்கே பிழைகளுக்கான தண்டனைகளை எமது தலைவர் அவர்கள் நேரடியாக வழங்குவதில்லை ‘இது தளபதிகளாலும், பொறுப்பாளர்களாலுமே வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடத் தக்கது’ மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் இங்கே எமது தலைவர் தான் இவர்களை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை’ மேலும் போர் முடிவிற்குப் பின்னர் இவர்களை கட்டுப்படுத்துவதற்கு இவர்களை உருவாக்கியவர்களின் பலம் அற்றிருப்பதால் இவர்கள் தற்பொழுது கட்டுக்கடங்காமல் கட்டாக்காலிகளாக செயற்பட்டு வருவதையும், அவ்வமைப்பிற்கு இளுக்கினை ஏற்படுத்தி வருவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அப்படியென்றால் இவர்களை யார் தண்டிப்பது? இந்தக் கேள்விக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை நேசித்த எமது மக்களிடம் தான் பதில் இருக்கின்றது. அத்தோடு இன்று அவ்வமைப்பின் அனைத்துப் போராளிகளும் மக்களோடு தான் இருக்கிறார்கள்’ ஆகையினால் நிச்சயம் மக்களால் தான் இவர்களை தண்டிக்க முடியும். மேலும் மக்களுக்கு எதிராகவும், மக்களின் தேவைகளுக் கெதிராகவும், மக்களின் தேவைகளை உணராதவர்களும் இன்னும் போரின் போது மடிந்த பொதுமக்களினதும், மாவீரர்களின் குடும்பங்களையும், காயமடைந்த பொதுமக்களையும் முன்னைநாள் போராளிகளையும், அவர்களின் குடும்பங்களையும் மற்றும் காணாமல் போனவர்களும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் குடும்பங்களையும், புனரமைக்காது தொடர்ந்தும் இவர்கள் செயல்திறன் அற்றிருப்பதாலும் இவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பு எம்மக்களுக்கு இன்று நிச்சயம் இருக்கின்றது.

மேலும் விடுதலைப் போர் என்பது அது ஒட்டுமொத்த எம் இனத்திற்குமானது. இங்கே அவர்களை புறந்தள்ளி போரினால் பாதிக்கப்படாமலிருந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டவர்களை உரியமுறையில் கவனிக்காமல் விட்டால் இவர்களை எமது அரசியல் பிரதிநிதிகளாக வைத்திருக்கவேண்டிய தேவையும் எமது மக்களுக்கு இல்லை.

இங்கே இனப்பிரச்சினை என்பது சிங்களத்தால் திட்டமிட்டு காலங்களை கடத்தி மழுங்கடிக்கப்பட்டுவரும் ஒரு தந்திரமான பிரச்சினையாகவே உள்ளது. இது எப்போது தீர்க்கப்படும் என்று எவராலும் அறுதியாக கூறமுடியாது. ஆகவே பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உடனடியாக என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அதை விடுத்து சிங்களத்துடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்தை என்று கூட்டமைப்பினர் திரிவதை இனியும் எமது மக்கள் அனுமதிக்க முடியாது.

ஆகவே கூட்டமைப்பிற்கான தண்டனையாக இந்தத் தேர்தலை பயன்படுத்தி இதுவரை இயங்கு நிலையற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் செவியில் பிடித்து அனுப்பிவிட்டு புதிய உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். ஆனால் இந்த மாற்றத்தை இந்தத் தேர்தல் ஊடாக நிகழ்த்த முடியாது. ஆனாலும் வீட்டைவிட்டு துரத்த முடியும். இதன் பின் வருகின்ற தேர்தலில் உறுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பதே உறுதியான எமது மக்களின் நிலைப்பாடு. ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட எவரையும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று போரினால் பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன் நான் வேண்டிநிற்கின்றேன்!

நன்றி
உண்மையுள்ள
முன்னைநாள் போராளி!