புலிக்கு மாற்றாய் பூவுலகில் யாருண்டு..எதுவுண்டு..சொல் தம்பி?

Fotor0707222815

குதிரைக்கு மாற்றாய்க் கழுதை வரலாம்
உருவத்தில் சில ஒற்றுமைகள் அங்குண்டு!
காட்டெருமைக்கு மாற்றாய் நாட்டெருமை வரலாம்..
குணத்தில் இல்லா விடினும் உருவ ஒற்றுமை உண்டு..
அட நாணலுக்கு மாற்றாய் கோரைப் புல் வர முடியுமா?

பைங் கிளிக்கு மாற்றாய் பருந்து வர முடியுமா?
குயிலுக்கு மாற்றாய் கோட்டான் வர முடியுமா?
மயிலுக்கு மாற்றாய் வான்கோழி வர முடியுமா?
அட சாமி..அதையெல்லாம் விட…
புலிக்கு மாற்றாய் பூனை வர முடியுமா?

பூனைக்கு நகத்தால் விராண்டித்தான் பழக்கம்..
பாய்ந்தோடி வீரம் பூனையால் காட்ட முடியுமா?
பாயும் புலிக்கு இணை பாயும் புலிதான்..
புலிக்கு மாற்றாய் பூவுலகில் யாருண்டு..எதுவுண்டு..சொல் தம்பி?

(www.eelamalar.com)