60

புலிப் பாய்ச்சல் ஒன்றுதான்
புதிய வாழ்வுதரும் என்றுணர்..!

மண்ணைக் கடந்து விட்டோம்..
மலையைக் கடந்து விட்டோம்..
இனி..
கடலைக் கடப்பதுதான் மிகுதி..
அதற்குள்..
களைத்து விடாதே என்னுறவே ..!

முட்கள் குத்தியபோது
பிடுங்கி எறிந்தாய்..
கற்கள் குத்தியபோது
நிமிர்ந்து நின்றாய்..அதுபோல்..

கடலைக் கடப்போம் என்பதும் உறுதி..
அதற்குள்..
காலம் நமக்கு துணை புரியும்..
களைத்து விடாதே என்னுறவே..!

நீச்சல் அடிக்கத் தெரியவில்லை
என்று நினைக்காதே..
முயன்றுபார் உன்னால் முடியும்..
உன்..
பாய்ச்சல் ஒன்றுதான் தமிழ் இனத்தின்
காய்ச்சலை மாற்றும் என்றுணர்!

புலிப் பாய்ச்சல் ஒன்றுதான்
புதிய வாழ்வுதரும்..புரிந்துகொள் !
மேய்ச்சல் நிலத்தில் நாள்முழுதும்
மேயும் மாடுகள்போல் நின்றுவிடாதே..!

உன்னுடலில் ஓடுவது
வாலிப இரத்தம்..என்பதால்
ஓய்ச்சல் இன்றி உழைக்க தயாராகு..!
அப்போது..
உருவாகும் நம்மினிய
தமிழ் ஈழம் என்றுணர்!