பெண் புலிகள்…!!!

“பெடியளால் ஏலுமெண்டால் ஏன் உங்களாலெ ஏலாது”

என்ற தேசியதலைவரின் ஒற்றை வரியில் அமைந்துள்ளது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்புலிகள் படைத்த மாபெரும் வெற்றிகள்,மகத்தான அதியுச்ச சாதனைகள் அனைத்தும்.

தலைவர் மணலாற்று காட்டுக்குள் இருந்துகொண்டு இந்தியன் ஆமியை எதிர்து போரிடும் முடிவை எடுத்தபோது,இந்தியா ஆமி மிகப்பெரிய படை அவர்களை எதிர்த்து நம்மால் தாக்குபிடிக்க ஏலுமோ என்று சில பொறுப்பாளர்கள்,போராளிகள் தயங்கியபோது தலைவரிடம் இருந்து கனிரென்று பதில் வந்தது

“”உங்களால் ஏலாது எண்டால் விலகி செல்லுங்கள் நான் இவர்களை வைத்தே இந்தியன் ஆமியை வந்த வழிக்கே விரட்டியடிக்கின்றேன்”” என்று பெண்புலிகளை நோக்கி கைநீட்டினார்.

எந்தளவிற்கு தலைவர் பெண்புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.இன்னும் சொல்ல போனால் ஆமிக்கு பெடியளைவிட பெண்புலியளை கண்டுதான் கிலிகொள்ளுவான் பெண் புலியளிடம் வாங்கி கட்டினது அப்படி.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே
பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்ற பாரதியின் எழுச்சி முழக்கம் தாய்தமிழகத்தில் ஏட்டில் மட்டுமே இருந்தது அதை எங்கள் நாட்டில் நடாத்தி சாதித்துகாட்டியவர் எங்கள் ஈழச்சூரியன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.