போராளியை உருவாக்குவதில் கேணல் கிட்டுவின் மறைவான நினைவுகள்…!!!

என்னையும் ஒரு போராளியாக்கிய கிட்டு அண்ணா அன்று நாம் ஒரு காட்டி கொடுத்த துரோகியை தண்டிக்க புறப்பட்டு கொண்டு இருந்தோம் ,எமது திட்டமிடலின்படி அதிகாலை 6.30am க்கு நாம் கல்வியன்காட்டு சந்தியில் நிற்க வேண்டும் நானும் அருணாவும் ,ஊத்தையும் நடாவும் 6.19 am க்கு கோப்பாய் சாந்தியை தாண்டி போய் கொண்டு இருக்கும் போது எமது அருகில் வந்த மோட்டார் சாயிக்கிளில் கிட்டு அண்ணா 6.30 க்கு வர சொன்னால் ஏன் பிந்தி வருகிறீர்கள் ,அங்கே அவன் வந்து விட்டான் இதுதான் உங்களின் தமிழீழ விசுவாசமா?

எமது கால்கள் வலு பெற்ரன 6.23 நாம் அங்கே நின்றோம் நாம் அந்த துரோகி வெளியில் வரும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து இருந்த வேளை திடீர்என ஆர்மி ரக் வந்து விட்டது ,உடனும் அருணா சொன்னான் இன்று அவனை போடவில்லை என்றால் 4 பேருக்கும் கிட்டன் கையால் தான் சாவு ,நான் சின்ன பொடியன் என்பதால் மெதுவாக நகர்ந்து சென்று டீ கடையின் உள்ளே சென்று அவனை தலையில் 3 தடவை சுட்டு விட்டு ஓடினேன் எனது துராசிஷ்ட்ம் நானும் கிட்டு அண்ணாவும் ஒரே திசையில் ஓடினோம் ,ஆர்மி துரத்த தொடங்கினான் ,வேலி பாயும் போது எனது சாரம் (லுங்கி) வேலியில் மாட்டிகொண்டது களட்டிவிட்டு ஓடினேன்,சற்று தூரம் போன பின்பு ஒரு கிணற்றடியில் காய்ந்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் உள் பாவாடையை எடுத்து கட்டிகொண்டு ஓடினோம்.

அதை பார்த்த ஒரு அம்மா பாவாடை திருடன் திருடன் என்று கத்தினா ,உடனும் கிட்டு அண்ணா மவனே அவிழ்த்து போடு இல்லை உன்னை போட்டு விட்டு நான் போய் விடுவேன் என்றார் ,இது நடந்து சில மாதம்கள் கழித்து ஒரு அம்மா எமக்கு மத்திய சாப்பாடு நாளைக்கு தருவதற்காக முன் கூட்டியே கேட்க எமது முகாமுக்கு வந்து கொண்டு இருந்தா அப்போது கிட்டு அண்ணா என்னை பார்த்து சொன்னார் டே ,நீ இங்கே ஆர்மியை விட பொம்பிளைகளை பாவாடையை தேடி வர வைக்க போகிறாய் என்று ,இது நான் ஏன் எழுதுகிறேன் என்றால் எமக்குள்ளும் ஈரம் உண்டு உணர்வுகளும் உண்டு ,அதைவிட பாசமும் உண்டு ,அவன் அடி மேல் அடி அடித்து தான் எம்மை உருவாக்கினான்,அவனை பொறுத்தவரை அவன் யாரை நேசிக்கிறானோ அவனையே அடிப்பான் ,அவனோடு உண்மையாக வாழ்ந்தவனுக்கு மட்டுமே அவனை புரியும் ,அடித்து விட்டு அவன் கேட்கும் கேள்வி ஏன்டா என்னை மிருகம் ஆக்குறீங்கள்,அதை கேட்கும் போது எல்லாமே மறந்து விடும்,ஆம் பொட்டு முதல் சிட்டு வரை அடிவாங்கியதால் தான் சாதித்தார்கள் !!